குரூப் டான்சரா இருக்க கூட தகுதி இருக்கு.. கலரா, அழகா இருக்கணுமாம்.. கலா மாஸ்டர் சொன்ன ஷாக் நியூஸ்!

சென்னை: தினசரி வேலை, டென்ஷன், பிரஷர் என்று இருக்கக்கூடிய பொதுமக்களுக்கு திரைப்படம் பார்ப்பது தான் பொழுது போக்கு.

அதிலும் தனக்கு பிடித்த நடிகர், நடிகைகள் படம் என்றால் சொல்லவே வேண்டாம். முதல் நாள் முதல் ஷோவிற்கு டிக்கெட் எடுத்துக்கொண்டு பறந்து கட்டி படம் பார்க்கும் ரசிகர்களும் உண்டு.

வார இறுதி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பது தான், வார இறுதிகளில் திரைப்படங்கள் வெளியிடுவதற்கு இதுவே முக்கிய காரணம் ஆகும்.

படத்திற்கு பாடல்களும் முக்கியம்

திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்,நடிகைகள் மட்டும் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறார்கள் என்று அனைவருக்கும் பல யோசனை இருக்கும். அவர்கள் பயன்படுத்தும் அழகு சாதன பொருட்களில் இருந்து அவர்களின் லைஃப்ஸ்டைலே வேறு மாதிரியாக இருக்கின்றது. நடிகர்கள் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தால் மட்டுமே அவர்களின் படங்களும் பேசப்படும். ஒரு திரைப்படம் ஹிட் ஆவதற்கு எந்த அளவிற்கு நடிகர் நடிகர்கள் முக்கியமோ அதே அளவிற்கு படங்களில் இடம்பெற்றிருக்கும் பாடல்களும் ரசிகர்களை கவரும் வண்ணம் இருக்க வேண்டும்.

படம் பிளாப் பாடல்கள் ஹிட்

படம் பிளாப் பாடல்கள் ஹிட்

பல படங்கள் ப்ளாப்பான நிலையிலும் அந்த படங்களின் பாடல்கள் ஹிட் ஆனதும் உண்டு. அந்தப் பாடல்கள் ஹிட்டாவதற்கு காரணம் பின்னணி இசை, அதில் நடனம் ஆடும் நடிகர் நடிகைகள், மட்டுமில்லாமல் குரூப் டான்ஸர்களும் ஒரு காரணமாகவே இருக்கின்றனர். என்னதான் குரூப் டான்ஸ்ர்கள் ஹீரோ ஹீரோயின்களை விட நன்றாக டான்ஸ் ஆடினாலும் அது எடுபடுவதில்லை. ஹீரோயின்கள் ஆடுவதை ரசிகர்கள் வெகுவாக ரசித்து பார்க்கின்றனர். டூயட் பாடல்களில் ரசிகர் ரசிகர்கள் தனியாக டான்ஸ் ஆடுவது ஒரு தனி ரகம்.

ஷாக் நியூஸ் சொன்ன கலா மாஸ்டர்

ஷாக் நியூஸ் சொன்ன கலா மாஸ்டர்

ஃபோக் டான்ஸ், கனவு பாடல்கள் என்று எடுத்துக் கொண்டால் அதற்கு முக்கிய பங்கு வகிப்பவர்கள் குரூப் டான்ஸர்கள் தான். ஒரு நடிகர் நடிகைகளாக இருப்பதற்கு எப்படி பல தகுதிகள் வேண்டுமோ அதை போல் குரூப் டான்ஸராக இருப்பதற்கும் பல தகுதிகள் வேண்டும் என்கின்றனர். அப்படியெல்லாம் இல்லை என்று சொல்லும் ரசிகர்கள் யோசனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கலா மாஸ்டர். தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு என்று பல மொழிகளிலும் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி வருபவர் தான் கலா மாஸ்டர்.

இதெல்லாம் இருந்தா தான் வாய்ப்பு

இதெல்லாம் இருந்தா தான் வாய்ப்பு

பல வருடங்களாக சினிமா துறையில் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி வருகிறார், அது மட்டும் இல்லாமல் பிரபல டிவி ஷோகளுக்கு டான்ஸ் மாஸ்டர் ஆகவும், நடுவராகவும் இருந்து வருகிறார் கலா மாஸ்டர். குரூப் டான்ஸ்சராக இருப்பதற்கு என்னென்ன தகுதி வேண்டும் என்று இவர் கூறியிருப்பது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஒரு குரூப் டான்ஸராக இருக்க வேண்டும் என்றால் என்னென்ன தகுதி வேண்டும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ஒரு நடிகராக இருப்பதற்கு என்னென்ன தகுதி எல்லாம் கேட்பார்களோ, அதே போல் குரூப் டான்சராக இருப்பதற்கு உயரம், நிறம், அழகு போன்ற பல விஷயங்கள் இருந்தால் மட்டுமே குரூப் டான்ஸ்சராக தேர்வு செய்யப்படுவார்கள்.

வாய்ப்பு தேடும் திறமைசாலிகள்

வாய்ப்பு தேடும் திறமைசாலிகள்

கொஞ்சம் மாநிறமாகவோ அல்லது கருப்பாகவோ இருந்தால், 50 பேர் ஆடும் நடனத்திற்கு சேர்த்துக் கொள்வார்களே தவிர, டான்ஸர்கள் கம்மியாக இருக்கும் டான்ஸ்களுக்கெல்லாம் அவர்களை தேர்வு செய்ய மாட்டார்கள். இது இன்றும் இருக்கும் சூழ்நிலை தான். கருப்பாக , குள்ளமாக இருக்கும் பல பேர் திறமை இருந்தும் சாதிக்க முடியாமல் டான்ஸராக ஆக வாய்ப்பு தேடிக்கொண்டே இருப்பதை நான் கண் முன்னே இன்றும் காண்கிறேன் என்று கலா மாஸ்டர் கூறியிருக்கிறார். கலா மாஸ்டர் இப்படி கூறி இருப்பது ரசிகர்களை வருத்தம் அடையச் செய்ததுடன் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. சினிமாவில் இருந்தால் கோடி கோடியாக பணம் சம்பாதித்து விடலாம் என்று பல நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில், குரூப் டான்சராக இருப்பவர்களின் வாழ்க்கையிலும் பல பிரச்சனைகள் சந்திக்கிறார்கள் என்பது ரசிகர்களை வேதனை அடையச் செய்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.