அடி சக்க.. தங்கம் விலை குறையுமா.. ஏன் என்ன காரணம்.. கவனிக்க வேண்டிய 5 முக்கிய காரணிகள்..!

தொடர்ச்சியாக முந்தைய 4 வாரங்களாகவே தங்கம் விலையானது ஏற்றம் கண்டு வந்த நிலையில், நடப்பு வாரத்தில் சற்று சரிவில் காணப்பட்டது. இது வரும் வாரத்தில் எப்படியிருக்கும்? வார இறுதியில் சற்று அழுத்தத்தில் காணப்பட்ட நிலையில், தொடர்ந்து தங்கம் விலையானது 1800 டாலர்களுக்கு கீழாகவே முடிவடைந்துள்ளது.

குறிப்பாக எம்சிஎக்ஸ் கோல்டு விலையானது 2% குறைந்துள்ள நிலையில், ஸ்பாட் கோல்டின் விலையானது 3% சரிவினைக் கண்டுள்ளது. இது டாலர் மதிப்பு வலுவாக காணப்பட்ட நிலையில் சரிவில் காணப்பட்டது.

ஆக வரும் வாரத்திலும் தங்கம் விலையானது குறையலாமோ என்ற எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

ஜாக்சன் ஹோல் சிம்போசியத்தின் மீது கவனம்

ஜாக்சன் ஹோல் சிம்போசியத்தில் அமெரிக்க மத்திய வங்கியின் வருடாந்திர கூட்டமானது வரும நாட்களில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் ஃபெடரல் வங்கியின் தலைவர் பேசவுள்ளார். அப்போது வட்டி விகிதம் பற்றிய பேசப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆகஸ்ட் 25 முதல் ஆகஸ்ட் 27 வரையில் நடைபெறவுள்ளது. இதுவும் தங்கம் விலையில் முக்கிய தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

டாலர் இன்டெக்ஸ்

டாலர் இன்டெக்ஸ்

தங்கம் விலையினை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான டாலரின் மதிப்பு, தங்கம் விலையை தீர்மானிக்கும் முக்கிய அம்சமாகும். ஆக இதுவும் வரும் வாரத்தில் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். டாலரின் மதிப்பானது 108-க்கும் மேல் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் ஜிடிபி தரவு
 

அமெரிக்காவின் ஜிடிபி தரவு

அமெரிக்காவின் இரண்டாவது காலாண்டு ஜிடிபி மதிப்பீடானது வரும் வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது அமெரிக்கா பொருளாதார வளர்ச்சியின் பிரதிபலிப்பாக இருக்கலாம். ஆக இது தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம்.

அமெரிக்காவின் வர்த்தக இருப்பு

அமெரிக்காவின் வர்த்தக இருப்பு

அமெரிக்காவின் வர்த்தக இருப்பு குறித்தான தரவும் வரும் வாரத்தில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அமெரிக்க டாலரின் மதிப்பில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது தங்கத்திற்கு ஆதாரவாக அமையலாம். இது தங்கம் விலை அதிகரிக்க வழிவகுக்கலாம்.

அமெரிக்காவின் வீடு விற்பனை மற்றும் வேலை தரவு

அமெரிக்காவின் வீடு விற்பனை மற்றும் வேலை தரவு

அமெரிக்காவின் வீடு விற்பனை மற்றும் வேலை தரவு குறித்தான தரவுகள் வரும் வாரத்தில் வெளியாகவுள்ளன. இது அமெரிக்க பொருளாதார வளர்ச்சியினை பிரதிபலிக்கலாம். இது தவிர அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் உற்பத்தி குறித்தான தரவானது வெளியாகவுள்ளது. ஆக இதுவும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

gold price on 21st August 2022: US GDP to US Dollar 5 factors determining gold price

gold price on 21st August 2022: US GDP to US Dollar 5 factors determining gold pricegold price on 21st August 2022: US GDP to US Dollar 5 factors determining gold price/ அடி சக்க.. தங்கம் விலை குறையுமா.. ஏன் என்ன காரணம்.. கவனிக்க வேண்டிய 5 முக்கிய காரணிகள்..!

Story first published: Sunday, August 21, 2022, 12:24 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.