மாஜி பிரதமர் இம்ரான் கான் உரையை 'லைவ்' செய்ய தடை: பாகிஸ்தான் அரசு அதிரடி!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உரையை நேரலையாக ஒளிபரப்ப பாகிஸ்தான் ஊடக அமைப்பு தடை விதித்துள்ளது.

இஸ்லாமாபாத் காவல் துறை அதிகாரி மற்றும் பெண் மாஜிஸ்திரேட்டை மிரட்டியதற்காக பாகிஸ்தான் தெஹ்ரீக் – இ – இன்சாப் (பிடிஐ) தலைவரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கானின் நேரடி உரைகளை ஒளிபரப்ப பாகிஸ்தானின் ஊடக ஒழுங்குமுறை ஆணையம் தடை விதித்துள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக தொலைக்காட்சியில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதாக இம்ரான் கானின் பிடிஐ கட்சி தலைவர் ஷாபாஸ் கில் மீது, அந்நாட்டின் ஊடக அதிகார மையத்தால் அவர் பேசியது “மிகவும் வெறுக்கத்தக்க மற்றும் தேசத்துரோகம்” என்று குற்றம்சாட்டப்பட்டு கில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட இம்ரான் கானின் பிடிஐ கட்சி தலைவர் ஷாபாஸ் கில்லுக்கு ஆதரவாக இஸ்லாமாபாத்தில் பிடிஐ கட்சி பேரணியை நடத்தியது. போலீஸ் காவலில் ஷாபாஸ் கில் கொடூரமான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக அக்கட்சி குற்றம்சாட்டியது. எதிர்க்கட்சிகளுக்கு ஒரு செய்தியை அனுப்பவும் மக்களை பயமுறுத்தவும் கில் பிடிபட்டு சித்ரவதை செய்யப்பட்டார் என்று இம்ரான் கான் குற்றம் சாட்டினார்.

உலகம் முழுதும் கொரோனா தொற்று அதிகரிப்பு..!- ஷாக்கிங் ரிப்போர்ட்..!

மேலும் இம்ரான் கான் பேசுகையில், “ஷாபாஸ் கில்லை சித்ரவதை செய்ததற்காக இஸ்லாமாபாத்தின் போலீஸ் ஐ.ஜி, துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் மற்றும் பெண் மாஜிஸ்திரேட் ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்வோம். ஐஜியை விட்டு வைக்க மாட்டோம்” என்று ஆவேசமாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, இம்ரான் கானின் பதிவு செய்யப்பட்ட உரையை மட்டுமே ஒளிபரப்ப அனுமதிக்கப்படும் என்று பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் அனைத்து செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனல்களிலும் இம்ரான் கானின் நேரடி உரையை ஒளிபரப்ப உடனடியாக தடை விதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.