UPI பண பரிமாற்றத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படலாம்: ரிசர்வ் வங்கி சூசகம்

UPI charges as IMPS: UPI ஐப் பயன்படுத்தி நிதி பரிமாற்றம் செய்வது என்பது IMPS போன்றது என ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது, எனவே இனி அதற்கு கட்டணம் வசூலிக்கப்படலாம். யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் என்பதன் சுருக்கமான UPI, இந்தியாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. கார்டு மூலம் பணத்தை செலுத்துவதற்கு மாற்றாகவும், டிஜிட்டல் பேமெண்ட்டுகளுக்கான மற்றொரு தெரிவாகவும் தொடங்கப்பட்ட UPI இப்போது இந்தியாவிற்கு வெளியிலும் பயன்படுத்த ஏதுவாக இருக்கிரது. இதுவரை இலவசமாக பயன்படுத்தப்பட்ட இந்த வசதிக்கு இனி மேல் பணம் செலுத்த வேண்டுமா என்று விவாதங்கள் எழுந்துள்ளன.

இந்திய ரிசர்வ் வங்கி UPI பேமெண்ட்டுகளுக்கான கட்டணம் தொடர்பாக ஒரு திட்டத்தை முன்வைத்துள்ளது. “பணம் செலுத்தும் முறைகளில் கட்டணங்கள் பற்றிய விவாதம்” என்ற தலைப்பில், RBI இன் புதிய முன்மொழிவு, UPI முறையைப் பயன்படுத்தி செய்யப்படும் நிதி பரிவர்த்தனைக்கு கட்டணத்தை நிர்ணயிப்பது தொடர்பாக மத்திய வங்கி பரிசீலித்து வருகிறது.

UPI உள்கட்டமைப்பின் முதலீட்டு மற்றும் செயல்பாட்டிற்கான செலவை மீட்டெடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதே இதன் நோக்கமாகும். UPI ஐப் பயன்படுத்தி நிதி பரிமாற்றம் IMPS (உடனடி கட்டணம் செலுத்தும் சேவை) போன்றது என்று ரிசர்வ் வங்கி கருதுகிறது.

ரிசர்வ் வங்கி பரிந்துரை
செலுத்தப்படும் தொகையின் அடிப்படையில் யுபிஐ மூலமான பரிமாற்றத்துக்கான கட்டணம் நிர்ணயிக்கப்படலாம் என ரிசர்வ் வங்கி பரிந்துரைத்தது. மத்திய வங்கியின் கூற்றுப்படி,
UPI பேமெண்ட் என்பது நிதி பரிமாற்ற அமைப்பாகும், இது உடனடியாக பணத்தை செலுத்துகிறது.

ஆன்லைன் பண பரிமாற்றத்தின் கட்டணம் செலுத்தும் அமைப்பாக, கார்டுகளுக்கான T+n சுழற்சிக்கு மாறாக, நிகழ்நேரத்தில் பணம் செட்டில்மென்ட் செய்ய இது உதவுகிறது. பங்குபெறும் வங்கிகளுக்கு இடையேயான இந்த தீர்வு ஒத்திவைக்கப்பட்ட நிகர அடிப்படையில் செய்யப்படுகிறது, இதற்கு PSO தேவைப்படுகிறது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தீர்வு அபாயத்தை நிவர்த்தி செய்ய PSO ஐ எளிதாக்குவதற்கு வங்கிகள் போதுமான அமைப்புகளை அமைக்க வேண்டும். எனவே, இது வங்கிகளின் முதலீடு மற்றும் வளங்களை அதிக அளவில் பயன்படுத்தி, கூடுதல் செலவுகளுக்கு வழிவகுக்கும். ரிசர்வ் வங்கி அதை வாடிக்கையாளர்களிடமிருந்து மீட்டெடுக்க விரும்புகிறது.

“பணம் செலுத்தும் முறைகள் உட்பட எந்தவொரு பொருளாதார நடவடிக்கையிலும், பொது நலன் மற்றும் தேசத்தின் நலனுக்கான உள்கட்டமைப்பின் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் கூறுகள் இல்லாவிட்டால், இலவச சேவைக்கு எந்த நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை” என்று ரிசர்வ் வங்கி குறிப்பிட்டது.

ஆனால் அந்தச் செலவுகளை யார் ஏற்றுக் கொள்வார்கள் என்பதை ரிசர்வ் வங்கி அறிய முற்படுகிறது. “ஆனால் அத்தகைய உள்கட்டமைப்பை அமைப்பதற்கும் இயக்குவதற்கும் ஆகும் செலவை யார் ஏற்க வேண்டும் என்பது ஒரு முக்கிய விஷயம்…” என்று ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முழு கட்டண முறைமைகளை அமைப்பதில் பயன்படுத்தப்பட்ட செலவை மீட்டெடுப்பது பற்றிய விவாதங்கள், இனிமேல் டெபிட் கார்டுகளுக்கும் கட்டணம் விதிக்கப்படலாம் என்பதை சுட்டிக் காட்டுகின்றன. இனிமேல் டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கும் குறிப்பிட்ட கட்டணத்தை வசூலிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.