டெல்லிக்கு அடிக்கடி ஃபோன் போடும் பிடிஆர்… என்ன காரணம்?

பிடிஆர் விருப்பம்:
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தலைவராகவும், அனைத்து மாநிலங்களின் நிதியமைச்சர்களை உறுப்பினர்களாகவும் கொண்டுள்ள ஜிஎஸ்டி கவுன்சிவின் கூட்டம் பல்வேறு மாநிலங்களின் தலைநகரம் அல்லது பிரபல நகரங்களில் நடைபெற்று வருகிறது.

கடைசியாக 47 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஹரியானா மாநில தலைநகர் சண்டிகரில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக நிதியமைச்சர் பிடிஆர், அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை தமிழகத்தின் மதுரை மாநகரில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

அவரது கோரிக்கையை ஏற்றுகொள்ளும் விதமாக, 48 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஆதஸ்ட் முதல் வாரம் மதுரையில் நடைபெறும் என்று அறிவித்திருந்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். அமைச்சரின் இந்த அறிவி்்புக்கு முதல்வர் ஸ்டாலினும் நன்றி தெரிவித்திருந்தார்.

ஒத்திபோகும் கூட்டம்:
ஆனால் அமைச்சர் அறிவித்திருந்தபடி ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடத்தப்படவில்லை. இதற்கு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், நாட்டின் 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் ஆகியவை காரணங்களாக கூறப்பட்டு வந்தன. தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடரும் முடிவடைந்து, சுதந்திர தின கொண்டாட்டங்களும் நிறைவடைந்துவிட்ட நிலையில், 48 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறும் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகம் இன்னும் வெளியிடவில்லை.

கூட்டம் நடைபெறும் தேதியை முடிவு செய்து சொன்னால்தானே, மதுரைக்காரன் என்ற முறையில் கூட்டத்துக்கான ஏற்பாட்டை சிறப்பாக செய்ய முடியும்? அத்துடன் ஆகஸ்ட் முதல் வாரம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்னு சொன்னவங்க மாதத்தின் கடைசி வாரம் வரப்போகுது… இதுவரைக்கும்கூட தேதியை அறிவிக்காம இருந்த எப்படி? என்று அமைச்சகத்தில் தமக்கு நெருக்கமான சிலரின் ஆதங்கப்பட்ட பிடிஆர், இதுகுறித்து மத்திய நிதியமைச்சருக்கு அண்மையில் கடிதம் எழுதியுள்ளாராம்.

பிடிஆர் கடிதம்:
அதில்,’ 48 ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை ஏற்கெனவே அறிவித்தப்படி மதுரையில் நடத்துங்கள்; மதுரை கோயில் நகரம் மட்டுமல்ல; தமிழகத்தின் கலாசாரம், பாரம்பரியத்தை பறைசாற்றும் நகரமும் கூட. எனவே கூட்டத்தை மதுரையில் நடத்தினால், அதில் பங்கேற்கும் பிற மாநிலங்களை சேர்ந்த அமைச்சர்கள், மத்திய நிதி அமைச்சகத்தின் உயரதிகாரிகள் உள்ளிட்டோரை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட தூங்காநகரின் வரலாற்று சிறப்புமிக்க இடங்களை சுற்றி காட்டும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும்’ என பிடிஆர் குறிப்பிட்டுள்ளாராம்.

அமைச்சருக்கு ஃபோன்:
பிடிஆரின் இந்த கடிதத்துக்கு மத்திய நிதி அமைச்சகத்தில் இருந்து இதுவரை பதில் வந்ததாக தெரியவில்லை. இதனால் கொஞ்சம் அப்செட்டான பிடிஆர், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அவ்வபோது ஃபோன் போட்டு, மதுரை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்கு தேதியை முடிவு செஞ்சிட்டீங்களா? கூட்டத்தை வார இறுதி நாட்களில் வைத்தால் நன்றாக இருக்கும்! என்று ஆர்வமுடன் கேட்டு வருகிறாராம்.

மதுரையில் நடைபெறுமா?:
ஒரு மாநிலத்தின் நிதியமைச்சர் தமது சொந்த ஊரில் ஜிஎஸ்டி கூட்டத்தை நடத்த இவ்வளவு ஆர்வமாக இருக்கும்போது, தான் ஏற்கெனவே அறிவித்தபடி இந்த கூட்டத்தை மதுரையில் நடத்துவதற்கான தேதியை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதேசமயம். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்களில் தன்னிச்சையாகயும், மத்திய அரசை விமர்சிக்கும் விதத்திலும் கருத்துகளை தெரிவிப்பதை பிடிஆர் வழக்கமாக கொண்டுள்ளார். இதனை ஒட்டுமொத்த மத்திய நிதியமைச்சகமும் ரசிக்கவில்லையாம்.

அத்துடன், இலவச திட்டங்கள் குறித்து அண்மையில் நடைபெற்ற ஊடக விவாதத்திலும் மத்திய அரசை அவர், லெப் -ரைட் வாங்குவது போல நறுக்கு தெறிக்கும் கேள்வியை கேட்டிருந்தார். போதாக்குறைக்கு பிடிஆரின் கார் மீது பாஜகவினர் செருப்பு வீசிய சம்பவமும் மதுரையில் அண்மையில் நிகழ்ந்தது. இந்த சம்பவத்தை வைத்து திமுக- பாஜக இடையே வார்த்தை போர் நடைபெற்று கொண்டிருக்கிறது. இவற்றின் காரணமாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மதுரையில் நடத்தப்படும் திட்டம் கடைசி நேரத்தில் மாறுவதற்கும் வாய்ப்புள்ளதாக கூறுகின்றன டெ்ல்லி வட்டாரங்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.