Tamil news today live : பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து இபிஎஸ் வழக்கு : இன்று விசாரணை

பெட்ரோல் டீசல் விலை

இன்றைய பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும், டீசல் விலை ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

புதுக்கோட்டை சிறையில் விசாரணைக் கைதி மரணம்

புதுக்கோட்டை சிறையில் விசாரணைக் கைதி திடீரென உயிழிந்துள்ளார். இந்நிலையில் அவரை கிராமத்திற்கு காவல்துறை பாதிகப்பு போடப்பட்டுள்ளது. தடைசெய்யபட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கிவைத்திருந்ததாக இதுவரை நேற்று முன்தினம் காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். மேலும் அவர் மாரட்டைப்பால் இறந்துள்ளதாக காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர்.

சென்னையில் விமான சேவை பாதிப்பு

சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை – விமான சேவை பாதிப்பு. துபாய், பக்ரைன் மற்றும் லக்னோ விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய மற்ற விமானங்களும் தாமதம்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Live Updates
10:39 (IST) 22 Aug 2022
தங்கம் விலை

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 38,520க்கு விற்பனை.ஒரு கிராம் தங்கம் ரூ.4,815க்கு விற்பனை.

09:28 (IST) 22 Aug 2022
சிறுமியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக ஆறுதல்

சென்னை, ஆவடி அருகே அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நாளை முக சீரமைப்பு அறுவை சிகிச்சை. சிறுமிக்கான சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் அமைச்சர் நாசர் . சிறுமியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக ஆறுதல்

08:38 (IST) 22 Aug 2022
கோவில் அர்ச்சகர்கள் நியமனம்

கோவில் அர்ச்சகர்கள் நியமன விதிகள் தொடர்பாக அரசு அறிவிப்புகளை எதிர்த்த வழக்குகளில் இன்று தீர்ப்பு அளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்

08:28 (IST) 22 Aug 2022
செம்மொழித் தமிழாய்வு ; விருது விண்ணப்பம்

2023ம் ஆண்டுக்கான கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் அறிவிப்பு. இந்தியா மற்றும் வெளிநாட்டில் வாழும் சிறந்த அறிஞர்கள், ஆய்வாளர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். விருது தொடர்பான முழு விவரங்களை http://cict.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

08:27 (IST) 22 Aug 2022
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குழு ஆய்வு

கடலூர், சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குழு ஆய்வு. தீட்சிதர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இன்று மீண்டும் 6 பேர் கொண்ட குழு ஆய்வு

08:26 (IST) 22 Aug 2022
மின்சார கட்டணங்கள் உயர்வு: கருத்துக்கேட்பு கூட்டம்

சென்னை, கலைவாணர் அரங்கில் இன்று தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் மக்கள் கருத்து கேட்புக் கூட்டம் மின்சார கட்டணங்களை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ள நிலையில் கருத்துக்கேட்பு.

08:25 (IST) 22 Aug 2022
உலக சாம்பியனை வீழ்த்திய பிரக்ஞானந்தா

கிரிப்டோ கோப்பை செஸ் தொடரின் 7வது சுற்றில் உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்தினார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா. பிரதான போட்டி 2-2 என டிரா ஆன நிலையில், டை பிரேக்கரில் கார்ல்சனை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாதனை. நடப்பாண்டில் 3வது முறையாக உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

08:14 (IST) 22 Aug 2022
பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து இபிஎஸ் வழக்கு : இன்று விசாரணை

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த வழக்கு . சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை.

08:13 (IST) 22 Aug 2022
இன்று குரூப் 1 தேர்வு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 1 தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் இன்று

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.