ஆளுநருக்கே டஃப் கொடுக்கும் ஆம் ஆத்மி… பஞ்சாப்பில் சம்பவம் செய்த முதல்வர் பகவந்த் மான்!

‘ஆளு அல்லது ஆளுநர்களை வைத்து கெடு’ என்று புதுமொழி சொல்லும் அளவுக்கு பாஜக அல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் மத்திய அரசு தந்துவரும் குடைச்சல்கள் ஏராளம்.

நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாவை பல மாதங்களுக்கு பிறகு, தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பிய ஆர்.என்.ரவி, தெலங்கானா மாநில அரசுக்கு போட்டியாக ராஜ்பவனில் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தும் தமிழிசை சௌந்தரராஜன் என இப்படி பாஜக ஆட்சி புரியாத மாநிலங்களில் நீண்டு கொண்டே புோகும் ஆளுநர்களின் அட்ராசிட்டி பட்டியல் ஒவ்வொன்றும் ஒரு ரகம்.

இவற்றுக்கெல்லாம் உச்சமாக, தஸைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்ததில இருந்து இன்றுவரை அந்த மாநில அரசுக்கும், துணைநிலை ஆளுநர்களுக்கும் மோதல் போக்கு தொடர்ந்து கொண்டேதான் உள்ளது.

இப்படி இதுநாள்வரை மாநில கவர்னர்களே தங்களது அதிகாரம் என்ற பேரில், மாநில அரசுகளுக்கு நிர்வாக ரீதியாக நெருக்கடி அளித்துவரும் நிலையில், ஒரு மாநில ஆளுநருக்கே அதிர்ச்சி அளிக்கும்படியான சம்பவத்தை செய்துள்ளது பஞ்சாப் மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி அரசு.

தமிழகத்தின் முன்னாள் ஆளுநரான பன்வாரிலால் புரோஹித் தான் தற்போது பஞ்சாப் மாநிலத்தில் கவர்னராக பதவி வகித்து வருகிறார். கடந்த ஏப்ரல் 23 -29 ஆம் தேதி வரை, ஒருவார காலம் மதரீதியான நிகழ்ச்சிகளுக்கு ஆளுநர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சிக்கான மொத்த செலவு 8.31 லட்சம் ரூபாயை சம்பந்தப்பட்டவர்களுக்கு செட்டில் செய்துவிடும்படி மே 11 ஆம் தேதி தேதியிட்ட பில்லுடன், ஆளுநர் மாளிகையில் இருந்து பஞ்சாப் மாநில அரசுக்கு அண்மையில் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

ஆனால், அந்த கடிதத்தில குறிப்பிட்டிருந்தபடி பில்லை மாநில அரசு செட்டில் செய்யவில்லை. மாறாக, அதனை ஆளுநர் மாளிகைக்கே திருப்பி அனுப்பி பரபரப்பை ஏற்புடுத்தி உள்ளது பஞ்சாப் மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி அரச. ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கான செலவுகள் எந்த வகைப்பாட்டின் கீழ் வரும் என்று தெளிவாக தெரியாததால் அதுதொடர்பான பில் (ரசீது) திருப்பி அனுப்பப்படுகிறது என்றும் விளக்கமும் அளித்துள்ளது பஞ்சாப் மாநில அரசு.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.