தமிழ்நாட்டில் ரூ.31,500 கோடி மதிப்பில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்.. எந்த மாவட்டத்தில் தெரியுமா?

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் மற்ற பிற ஈக்விட்டி முதலீட்டாளர்களுடன் இணைந்து ஒரு கூட்டு திட்டத்தினை உருவாக்க, அதன் இயக்குனர் குழுவின் ஒப்புதலை பெற்றுள்ளது.

இந்த கூட்டு முயற்சியானது தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் காவிரி பேசின் சுத்திகரிப்பு நிலையத்தில் அமையவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த கூட்டணியானது 9 MMTPA திட்டத்தினை செயல்படுத்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எப்பவுமே இந்த பங்குகளுக்கு மவுசு தான்.. வாங்க ரெடியா இருங்க.. 3 பங்குகளை பட்டியலிடும் நிபுணர்கள்!

 இவ்வளவு செலவா?

இவ்வளவு செலவா?

இந்த அறிவிப்பு வெளியான நிலையில் இப்பங்கின் விலையானது கிட்டதட்ட 10% வர்த்தக அமர்வின் போது உச்சம் தொட்டது. இந்த கூட்டணியில் தொடங்கப்படும் 9 MMTPA சுத்திகரிப்பு திட்டத்திற்கான, செலவின் மதிப்பீடானது 31,580 கோடி ரூபாயாகவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

கூட்டணியில் யார் யார்?

கூட்டணியில் யார் யார்?

இந்த கூட்டு ஒப்பந்தத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரெஷனுடன், விதை ஈக்விட்டி முதலீட்டாளர்களாக ஆக்ஸிஸ் வங்கி, ஹெச் டி எஃப் சி வங்கி, எல்ஐசி, ஐ சி ஐ சி ஐ வங்கி, ஐ சி ஐ சி ஐ புரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் மற்றும் எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் என பலவும் அடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈக்விட்டி மூலம் முதலீடு திரட்டல்
 

ஈக்விட்டி மூலம் முதலீடு திரட்டல்

இது தவிர இந்த கூட்டு முயற்சிக்கு மத்தியில் ஈக்விட்டி முதலீடு மூலம், 2570 கோடி ரூபாய் முதலீட்டினை திரட்டவும் இயக்குனர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் நிறுவனத்தின் பங்களிப்பாக 25% இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாருக்கு எவ்வளவு பங்கு?

யாருக்கு எவ்வளவு பங்கு?

இந்த கூட்டணியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் வசம் தலா 25% பங்குகள் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மற்ற 50% பங்குகளை மற்ற விதை மூலதன முதலீட்டினை கொண்டிருப்பர்.

என்னென்ன பொருட்கள்?

என்னென்ன பொருட்கள்?

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் போர்ட்போலியோவில் எல்பிஜி, மோட்டார் ஸ்பிரிட், சுப்பீரியர் கெரோசின், விமான எரிபொருள், ஹை ஸ்பீடு டீசல், நாப்தா, பிட்யூமன், லூப் பேஸ் ஸ்டாக்ஸ், பாரஃபின் மெழுகு, ஹெக்சேன் மற்றும் பெட்ரோலியம் கோக் உள்ளிட்ட பொருட்கள் அடங்கும்.

 இன்றைய பங்கு நிலவரம்?

இன்றைய பங்கு நிலவரம்?

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் இன்றைய பங்கு நிலவரம், என்.எஸ்.இ-யில் 8.08% அதிகரித்து, 305.65 ரூபாயாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது. இதன் உச்ச விலை 311.50 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 282.60 ரூபாயாகவும் உள்ளது.

இதே பி.எஸ்.இ-யில் இதன் பங்கு விலையானது 8.03% அதிகரித்து, 305.95 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 311.25 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 283.10 ரூபாயாகவும் உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 417.95 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்த விலை 94.65 ரூபாயாகவும் உள்ளது.

இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 4555.94 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Chennai petroleum board approves JV with IOC, seed equity investors

Chennai petroleum board approves JV with IOC, seed equity investors/ தமிழ்நாட்டில் ரூ.31,500 கோடி மதிப்பில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்.. எந்த மாவட்டத்தில் தெரியுமா?

Story first published: Tuesday, August 23, 2022, 20:03 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.