கூல்டிரிங்க்ஸில் மயக்க மருந்து.. தள்ளாடிய சோனாலி போகத்.. தாங்கி பிடித்தது யார்?.. பகீர் வீடியோ!

கோவா: பாஜக பிரமுகரும் டிக்டாக் புகழ் நடிகையுமான சோனாலி போகத்திற்கு குளிர்பானத்தில் ஏதோ கெமிக்கலை கலந்து கொடுத்ததும் அதை குடித்த சோனாலி தள்ளாடிபடியே செல்வதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

Recommended Video

    ஹரியானா மாநிலத்தை சேர்ந்த நடிகையும் பாஜக நிர்வாகியுமான சோனாலி போகத் கடந்த 22 ஆம் தேதி இரவு கோவாவில் பார்ட்டிக்கு சென்ற நிலையில் 23ஆம் தேதி அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக கூறப்பட்டது.

    இந்த நிலையில் அவரது குடும்பத்தினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். போதை பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்து சோனாலி போகத்தின் உதவியாளர்களே கொலை செய்ததாக அவரது சகோதரர் பரபரப்பு புகாரை அளித்தார்.

    கோவா காவல் நிலையம்

    கோவா காவல் நிலையம்

    இதுகுறித்து கோவா காவல் நிலைய போலீஸார் புகாரின் பேரில் சந்தேகத்திற்குரிய மரணமாக வழக்குப் பதிவு செய்து சோனாலியினன் உதவியாளர்களான கதி சங்வான் மற்றும் சுக்வீந்தர் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சோனாலியின் உடற்கூராய்வு அறிக்கை வெளியானது.

    சோனாலி உடலில் காயங்கள்

    சோனாலி உடலில் காயங்கள்

    அதில் சோனாலியின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருப்பதாக தெரியவந்தது. இதனிடையே சோனாலியின் உடல் அவரது சொந்த ஊரான ஹரியானா மாநிலம் ஹிசாருக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டன.

    சோனாலியின் உதவியாளர்கள்

    சோனாலியின் உதவியாளர்கள்

    இந்த நிலையில்தான் கைது செய்யப்பட்ட சோனாலியின் உதவியாளர்கள் அவரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். கோவாவில் இரவு நேர பார்ட்டிக்கு முன்பு MDMA (Methylene Dioxymethamphetamine) என்ற கெமிக்கலை 1.5 கிராம் அளவிற்கு சோனாலி குடிக்கும் குளிர்பானத்தில் கலந்ததாக கூறியுள்ளனர்.

     குளிர்பானம்

    குளிர்பானம்

    மேலும் சோனாலி தனக்கு குளிர்பானம் வேண்டாம் என சொன்ன நிலையில் அவரை கட்டாயப்படுத்தி குளிர்பானத்தை குடிக்க கொடுத்ததும் தெரியவந்தது. இந்த நிலையில்தான் கடைசியாக பார்ட்டி நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.

    கைத்தாங்கல்

    கைத்தாங்கல்

    அப்போது சோனாலி தள்ளாடியபடியே அங்கு செல்வது அவரை யாரோ கைத்தாங்கலாக பிடித்த படியே அழைத்து செல்வதும் போன்ற வீடியோ காட்சிகள் பதிவாகியுள்ளன. அவ்வாறு கைத்தாங்கலாக அழைத்து செல்லும் நபர் சோனாலியின் உதவியாளர் சுதிர் என தெரிகிறது. இதையடுத்து உதவியாளர்கள் சுதிர் மற்றும் சுக்வீந்தர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எம்டிஎம்ஏ என்பது ஒரு வகையான போதை பொருள் என்பது தெரியவந்தது. இது மருந்து வடிவத்தில் கிடைக்கிறது. இந்த மருந்தை எடுத்துக் கொண்டால் உடலில் உள்ள நீர் சத்து குறைந்துவிடும். இதய துடிப்பையும் ரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கும். வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை ஏற்படும்.

    Source Link

    Leave a Comment

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.