இந்திய பொருளாதாரம் முதல் காலாண்டில் 13.5% வளர்ச்சி

தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) புதன்கிழமை (ஆகஸ்ட் 31) வெளியிட்ட தற்காலிக மதிப்பீடுகளின்படி, நடப்பு நிதியாண்டின் 2022-23 ஏப்ரல்-ஜூன் வரையிலான முதல் காலாண்டில் (Q1) நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 13.5 சதவீதம் உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.
2021-22 ஆம் ஆண்டின் இதே காலாண்டில் GDP 20.1 சதவிகிதம் அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் 2022-23 (FY23) காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் இரட்டை இலக்கங்களில் வளரும் என்று பொருளாதார வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

உண்மையான GDP வளர்ச்சி விகிதம் 13-16.2 சதவீதத்தில் காணப்படுகிறது. ரஷ்யா-உக்ரைன் போரின் தாக்கத்தில் மிதமான தாக்கம் மற்றும் சேவைத் துறையின் செயல்பாடு ஆகியவை வளர்ச்சியை அதிகரித்துவருகிறது.
அந்த வகையில், 2021-22க்கு முந்தைய ஜனவரி-மார்ச் காலாண்டில் (Q4) GDP 4.1 சதவீத வளர்ச்சியைக் கண்டது. இது குறித்த அரசாங்க தரவுகளின்படி, ஜூன் காலாண்டில் நிலையான அடிப்படையில் அடிப்படை விலையில் மொத்த மதிப்பு கூட்டல் (GVA) 12.7 சதவீதம் உயர்ந்துள்ளது.
தற்போதைய விலையில் அடிப்படை விலையில் மொத்த மதிப்பு கூட்டர் 2022-23 காலாண்டில் 26.5 சதவீதம் உயர்ந்துள்ளது.

நிதிப் பற்றாக்குறை

மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை, 2022-23 ஜூலை இறுதியில் ஆண்டு இலக்கில் 20.5 சதவீதத்தைத் தொட்டது. இது ஒரு வருடத்திற்கு முன்பு 21.3 சதவீதமாக இருந்தது.
இது பொது நிதியில் ஏற்பட்ட முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கிறது. உண்மையில், இந்த நிதியாண்டின் ஏப்ரல்-ஜூலை காலகட்டத்தில் நிதிப் பற்றாக்குறை – செலவுக்கும் வருவாய்க்கும் உள்ள வித்தியாசம் ரூ.3,40,831 கோடியாக இருந்தது.

நிதிப்பற்றாக்குறை என்பது சந்தையில் இருந்து அரசாங்கம் வாங்கும் கடன்களின் பிரதிபலிப்பாகும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.