#BREAAKING : தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, தேனி, தென்காசி மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, திருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.