கருப்பு உதடு சிவப்பாக ஜொலிக்க வேண்டுமா? இதோ சூப்பரான டிப்ஸ்


பொதுவாக நம்மில் பலருக்கு உதடுகள் கருமையாக காட்சியளிப்பதுண்டு.

உதடுகள் கருமையாக இருக்க பல காரணங்கள் உண்டு. அவை சூரிய ஓளி நேரடியாக முகத்தில் படுவது, பருவ நிலை மாற்றம், குறைந்த இரத்த ஓட்டம், மனச்சோர்வு, உதட்டுச்சாயத்தை அழிக்க மறப்பது, புகை பிடிப்பது, புகையிலை பழக்கம் போன்றவை.

உதடுகள் பிங்க் நிறத்தில் இருக்க அதனை தகுந்த முறையில் பராமரிக்க வேண்டும்.

இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே உதட்டின் நிறத்தை பராமரிக்கலாம். தற்போது அவை எப்படி என்பதை பார்ப்போம். 

கருப்பு உதடு சிவப்பாக ஜொலிக்க வேண்டுமா? இதோ சூப்பரான டிப்ஸ் | Beauty Tips To Make Lips Red And Soft

WAVEBREAKMEDIA LTD/GETTY IMAGES

  • கருப்பு உதடு சிவப்பாக பீட்ரூட் சாறு 2 தேக்கரண்டி, எலுமிச்சை சாறு கால் தேக்கரண்டி, நாட்டுச் சர்க்கரை 3 தேக்கரண்டி, தேங்காய் எண்ணெய் 1 தேக்கரண்டி இவை அனைத்தையும் நன்றாக கலந்து, ஒரு கண்ணாடி குப்பியில் காற்றுப் புகாதவாறு மூடி, குளிர்சாதனப் பெட்டியில் பாது காக்கவும். இதனை தினமும் 2 முறை தடவி வந்தால், உதடுகள் மென்மையாகவும், சிகப்பாகவும் மாறும்.
  • பன்னீர் ரோஜா இதழ்கள் 20 கிராம் (அரைத்தது), பசுவின் பால் 1 தேக்கரண்டி, இவை இரண்டையும் நன்றாக கலந்து, தினமும் உதடுகளின் மேல் தடவி வந்தால் உதடுகள் சிகப்பாகவும், மிருதுவாகவும் காட்சி யளிக்கும்.
  • உதட்டில் வெள்ளை நீங்க சிறிது கஸ்தூரி மஞ்சளுடன் பசும்பால் கலந்து, பூசி வந்தால் உதடுகள் பளபளப்பாகவும், சிகப்பாகவும் மாறும். மேலும் மஞ்சள் கருமை நிரத்திற்கு காரணமான மெலனின் தடுப்பானாக செயல்பட்டு உதடுகளை ஒளிரச் செய்ய உதவுகிறது.
  • வெள்ளரிக்காயை சிறு துண்டாக நறுக்கி தினமும் 5 நிமிடங்களுக்கு உதடுகளில் தேய்க்கவும். தினமும் செய்து வர உதடுகளில் நிரமாற்றம் ஏற்படுவதை காணலாம்.
  • தேங்காய் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய்யை சம அளவு கலந்து தினமும் தூங்க செல்வதற்கு முன் உதடுகளில் தடவ வேண்டும். இது உதடுகளை சிவப்பாகவும் மென்மையாகவும் மாற்றுகிறது.
  • பொதுவாக மசாஜ் செய்யும் பொழுது உதட்டில் இரத்த ஓட்டம் அதிகமாகி உதடு இளஞ்சிவப்பாக மாறும். சிறிதளவு பாதம் எண்ணெய் கொண்டு உதடுகளை மாசஜ் செய்து வர உதடுகள் ஈரப் பதமாகவும், இளஞ்சிவப்பாகவும் மாறும்.
     



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.