அடுத்தடுத்து டெக் ஊழியர்கள் பணிநீக்கம்.. என்ன தான் பிரச்சனை..? எப்போது விடிவுகாலம்..?

இந்திய ஸ்டார்ட்அப் சந்தை 2021ல் வியக்க வைக்கும் அளவிற்குச் சுமார் 35 பில்லியன் டாலருக்கும் அதிகமான முதலீட்டை ஈர்த்து சற்றும் எதிர்பார்க்காத வகையில் புதிதாக 44 யூனிகார்ன் நிறுவனத்தை உருவாக்கியுள்ளது.

இந்தத் தடாலடி முதலீட்டைப் பயன்படுத்தி அதிகளவிலான ஊழியர்களைப் பணியில் அமர்த்திய பெரும்பாலான நிறுவனங்கள் தற்போது பணிநீக்கம் செய்து வருகிறது. உலகளாவிய பிரச்சனைகளும், மேக்ரோஎக்னாமிக் காரணிகள் இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் பார்டி Mode-ஐ மொத்தமாக மாற்றியுள்ளது.

2022ஆம் ஆண்டில் மட்டும் ஓலா, Blinkit, Unacademy, வேதாந்து, and BYJU’S-க்கு சொந்தமான WhiteHat Jr மற்றும் Toppr போன்ற பல முன்னணி நிறுவனங்கள் உடன் சேர்ந்து 11,௦௦௦-த்திற்கும் அதிகமான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த மோசமான நிலைக்கு என்ன காரணம்..? எப்போது ஸ்டார்ட்அப் சந்தையின் நிலை சரியாகும்..?

ஆன்லைன் பேக்கரியில் ரூ.75 கோடி வணிகம்.. மாஸ் காட்டும் 3 நண்பர்கள்.. !

வென்சர் கேப்பிடல்

வென்சர் கேப்பிடல்

பொதுவாக அதிவேக மதிப்பீட்டு வளர்ச்சி, அதிகப்படியான லாபம் கிடைக்கும் என்ற வாக்குறுதி பெயரில் தான் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மீது துணிந்து அதிகப்படியான தொகையை வென்சர் கேப்பிடல் முதலீட்டாளர்கள் முதலீடு செய்கின்றனர்.

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்

இந்த முதலீட்டை நம்பி தான் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தங்கள் திட்டங்களை அறிமுகம் செய்யவும், உருவாக்கும் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களைப் பணியில் அமர்த்துகிறார். ஆனால் அனைத்து திட்டங்களும் செங்குத்தான வளர்ச்சியையும், அனைத்து சந்தைகளிளும் வொர்க் அவுட் ஆகாது.

நிதி ஆதாரம்
 

நிதி ஆதாரம்

இந்த நிலையில் போதுமான நிதி ஆதாரம் இல்லாத போது ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முற்படுகிறது, இந்தியாவில் தற்போது ஏற்பட்டு இருக்கும் பணிநீக்கம் “கவலைக்குறிய நிலையில் இல்லை” என்று bigbasket, Portea Medical, HomeLane மற்றும் BlueStone போன்ற நிறுவனங்களின் ப்ரோமோட்டர் கே கணேஷ் ஸ்டார்ட்அப் சந்தையில் நிலவும் பணிநீக்க சூழ்நிலையை விளக்குகிறார்.

பணிநீக்கம்

பணிநீக்கம்

இந்தியாவில் ஏன் பணிநீக்கம் கவலைக்குரிய நிலையில் இல்லை என்றால் இந்தியாவில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட 14 லட்சம் வேலை வாய்ப்புகளில் வெறும் 2 சதவீதத்திற்கும் குறைவான எண்ணிக்கையிலேயே தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகக் கே.கணேஷ் விளக்குகிறார்.

 75,000 ஸ்டார்ட்அப்-கள்

75,000 ஸ்டார்ட்அப்-கள்

மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையில் (DPIIT) பதிவுசெய்யப்பட்ட 75,000 ஸ்டார்ட்அப்-கள் ஆகஸ்ட் 3, 2022 வரை 750,000-க்கும் அதிகமான வேலைகளை உருவாக்கியுள்ளன என அரசு தரவுகள் கூறுகிறது. இது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவில் சுமார் 5,200 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் டிபிஐஐடி-பதிவு செய்யப்பட்டு இருந்தன.

DPIIT துறை

DPIIT துறை

இதேபோல் அனைத்து ஸ்டார்ட்அப் நிறுவனம் மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையில் (DPIIT) தளத்தில் பதிவு செய்யப்படுவது இல்லை, இந்தச் சூழ்நிலையில் 750,000-க்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் எண்ணிக்கை மிகவும் குறைவானது.

சிறு பிரிவு இல்லை

சிறு பிரிவு இல்லை

ஸ்டார்ட்அப்-கள் பிரிவு இந்தியாவில் தற்போது சிறு பிரிவு இல்லை, இதேபோல் அதிகப்படியான முதலீட்டை ஈர்த்துக் குறுகிய காலத்தில் அதிகப்படியான வர்த்தகத்தையும் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் முக்கியப் பிரிவாகத் துறையாக வளர்ந்துள்ளது. இதேபோல் ஸ்டார்ட்அப்-களில் பணிநீக்கம் என்பது புதிதல்ல. ஆனால் இந்த முறை வியக்க வைக்கும் எண்ணிக்கை என்பது ஒப்புக்கொள்ள வேண்டும்.

பென்ச்மார்க் வட்டி

பென்ச்மார்க் வட்டி

உலக நாடுகளில் இருக்கும் மத்திய வங்கிகள் பணவீக்கத்தைக் குறைக்கத் தங்களது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை உயர்த்திய பின்பு இந்தியாவில் முதலீடு செய்திருக்கும் வெளிநாட்டு வென்சர் கேப்பிடல் நிறுவனங்கள் புதிய முதலீடுகள் செய்வதை மொத்தமாக நிறுத்தியது. இதுதான் தற்போது ஸ்டார்ட்அப் நிறுவன பணிநீக்கத்திற்கு அடிப்படை காரணமாக உள்ளது.

ஐடி சேவை நிறுவனங்கள்

ஐடி சேவை நிறுவனங்கள்

இந்த நிலை எப்போது சரியாகும் என்று பார்த்தால், 2022 ஆம் நிதியாண்டில் இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் 19 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கும் நிலையில் அமெரிக்கப் பொருளாதார மந்த நிலையால் அடுத்த 2 வருடம் மிதமான வளர்ச்சி மட்டுமே காணும் எனக் கிரிசில் தெரிவித்துள்ளது.

திக் திக் மொமன்ட்

திக் திக் மொமன்ட்

கிட்டதட்ட இதே நிலை தான் இந்திய டெக் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கும் இருக்கும், அதுவரையில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கும், ஸ்டார்ட்அப் ஊழியர்களுக்கும் திக் திக் மொமன்ட் தான். இந்த 2 வருட காலத்திற்குப் புதிய முதலீடுகள் எதிர்பார்ப்பதும் கடினம் என்பது கூடுதலான சுமை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Why Startup companies are Laying Off Employees; is overfunding a big problem

Why indian Startup companies are Laying Off its Employees after 35 billion USD investment roadshow with new 44 unicorns. is overfunding a big problem amid USA central bank rate hikes.

Story first published: Friday, September 2, 2022, 17:16 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.