என்.எஸ்.இ., முன்னாள் தலைவர் ரவி நாராயணன் கைது| Dinamalar

புதுடில்லி- பண மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள என்.எஸ்.இ., எனப்படும் தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைவர் ரவி நாராயண் கைது செய்யப்படடார்.

.தேசிய பங்குச் சந்தையின் ஆலோசகராக ஆனந்த் சுப்ரமணியன் என்பவரை நியமனம் செய்ததில் மோசடி நடந்ததாக, என்.எஸ்.இ.,யின் முன்னாள் நிர்வாக இயக்குனர்களான சித்ரா ராமகிருஷ்ணா, ரவி நாராயண் ஆகியோர் மீது, ‘செபி’ எனப்படும் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு குற்றஞ்சாட்டியது.

இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் நிர்வாக இயக்குனர் என்.எஸ்.இ., சித்ரா ராமகிருஷ்ணாவை, சி.பி.ஐ., கைது செய்தது.
இந்நிலையில் .தேசிய பங்குச் சந்தை தொடர்பாக தொலை பேசி ஒட்டு கேட்டது, மற்றும் பண மோசடி தொடர்பாக என்.எஸ்.இ., முன்னாள் தலைவர் ரவி நாராயணன் மீது அமலாக்கத்துறை வழக்குபதிவு செய்துள்ளன. இது தொடர்பாக நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.