வாட்ஸ்ஆப் போன் கால் செய்ய கட்டணமா? டிராய் எடுக்கப் போகும் முடிவு என்ன?

வாட்ஸ் ஆப் செயலி மூலம் போன் கால், வீடியோ கால் செய்ய விரைவில் கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜியோ நிறுவனம் தொடங்கப்பட்ட பிறகு இலவச அழைப்புகள், டேட்டா போன்றவை வழங்கப்பட்டன. பின்னர் சில மாதங்கள் கழித்து கட்டணம் வசூலிக்கப்பட்டன. இப்போது ஜியோ, ஏர்டெல், வீ என எல்லா டெலிகாம் நிறுவன கட்டணங்களும் கிட்டத்தட்டச் சமமாகவே உள்ளன.

எனவே இணையதள டேட்டா உள்ள பேக், வீடு அல்லது அலுவலகத்தில் உள்ள வைஃபை சேவையை பயன்படுத்தி வாட்ஸ்ஆப் மூலம் அழைப்பது தொடர்ந்து அதிகரித்து வருவதாகத் தரவுகள் கூறுகின்றன.

வாட்ஸ்ஆப் மூலம் இன்சூர்னஸ் கிளைம் சேவை அளிக்கும் நிறுவனம்!

ஒழுங்குமுறை

ஒழுங்குமுறை

இந்நிலையில் வாட்ஸ் ஆப் அழைப்புகள், சிக்னல், கூகுள் மீட், ஸ்கைப், வைபர், ஃபேஸ் டைம் போன்ற செயலிகள் மூலம் ஆன்லைனில் கால் செய்து பேசும் செயலிகளை ஒழுங்குபடுத்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இந்த செயலிகள் மூலம் தகவல்கள் (மெசேஜ்) அனுப்புவது ஒழுங்குமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

டெலிகாம் துறை

டெலிகாம் துறை

சென்ற வாரம் டிராய் வழிக் காட்டுதல்களின்படி ஆன்லைன் செயலிகள் மூலம் செய்யப்படும் அழைப்புகளை ஒழுங்குமுறை படுத்த பல்வேறு விதிகளை பரிந்துரைத்துள்ளது.

உரிமம்
 

உரிமம்

இந்த புதிய விதிகள் அமலுக்கு வந்தால் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட ஆன்லைன் மூலம் மற்றொரு நபருடன் பேசும் சேவை வழங்கும் செயலி நிறுவனங்கள் அதற்காக உரிமம் பெற வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்படும். ஆனால் அதற்கு என்ன கட்டணம் செலுத்த வேண்டும் என்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. அதிகாரப்பூர்வமாக அறிவிப்புகள் வெளியாகும் போது அதற்காக விடை கிடைக்கும்.

ஆண்டு கட்டணம்

ஆண்டு கட்டணம்

ஆனால் இந்த செயலி நிறுவனங்கள் தொடர்ந்து இது போன்ற போன் அழைப்பு சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் ஆண்டு கட்டணம் செலுத்த வேண்டும் என கூறப்படுகிறது. நெட் நியூட்ராலிட்டி கீழ் இந்த விதிகள் அமலுக்கு வரப்பட உள்ளன.

ஓடிடி

ஓடிடி

மேலும் ஓடிடி நிறுவனங்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டு வர வேண்டும் என்ற டெலிகான் நிறுவனங்கள் கோரிக்கை வைத்து வருகின்றன. எனவே ஓடிடி நிறுவனங்களுக்கு விரைவில் அண்டு உரிமம் கட்டணம் வசூலிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

கட்டணம் வசூலிக்கப்படுமா?

கட்டணம் வசூலிக்கப்படுமா?

டிராய் பரிந்துரைகள் அமலுக்கு வந்தால் வாட்ஸ்ஆப் உள்ளிட்ட நிறுவனங்கள் கட்டணங்கள் வசூலிக்க் அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும் ஓடிடி நிறுவனங்கள் தங்களது கட்டணத்தை அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

WhatsApp Call May Charged Soon Under Trai Regulation

WhatsApp Call May Charged Soon Under Trai Regulation | வாட்ஸ்ஆப் போன் கால் செய்ய கட்டணமா? டிராய் எடுக்கப் போகும் முடிவு என்ன?

Story first published: Tuesday, September 6, 2022, 8:35 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.