அதிகப்படியான கடனில் சிக்கித் தவிக்கும் 10 நாடுகள்.. இந்தியா-வும் லிஸ்டில் இருக்கா?

ஐஎம்எஃப் எனப்படும் சர்வதேச நாணய நிதியம், உலக நாடுகளில் அதிக கடன் கொண்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் உலகின் முன்னணி வளர்ச்சியில் உள்ள நாடுகள் கூட இடம்பெற்றுள்ளது தான் ஆச்சரியமளிக்கும் ஒரு விஷயமாக உள்ளது.

ஐஎம்எஃப் அறிக்கையின் படி முதல் 10 அதிக கடனுள்ள நாடுகளை பார்ப்போம். இதில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளதா? எத்தனையாவது? எவ்வளவு கடன் வாருங்கள் பார்க்கலாம்.

இந்தியாவுக்கு பிரச்சனையாக மாறும் சர்வதேச மந்த நிலை.. எப்படி தெரியுமா?

ஜப்பான்

ஜப்பான்

ஆசிய நாடான ஜப்பான் மிகப்பெரிய கடனை கொண்டு டாப் 10 பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஜப்பானி மக்கள் தொகை 127,185,332 ஆகும். இது அதன் ஜிடிபியில் 234.18% கடனை கொண்டுள்ளது. இதன் கடன் தொகை 9087 டிரில்லியன் டாலராக உள்ளது.

கீரிஷ்

கீரிஷ்

இந்த டாப் 10 பட்டையலில் இரண்டாவதாக அதிகளவில் கடன் அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் கிரீஷ் உள்ளது. இதன் கடன் மதிப்பு 381.72 பில்லியன் டாலராகும். பணக்கார நாடுகளில் ஒன்றாக இருக்கும் கிரீஷ், அதன் ஜிடிபியில் 193.30% கடனை கொண்டுள்ளது.

போர்ச்சுகல்
 

போர்ச்சுகல்

மூன்றாவது இடத்தில் இருக்கும் போர்ச்சுகல் நாட்டின் மொத்த கடன் மதிப்பு 285 பில்லியன் டாலராகும். போர்ச்சுகள் குறைந்த உற்பத்தி திறன் கொண்ட நாடுகளில் ஒன்றாக உள்ளது. இது புதிய டெக்னாலஜிகளில் முதலீடு மிக குறைவாகும். இதன் ஜிடிபியில் கடன் விகிதம் 127% ஆகும்.

இத்தாலி

இத்தாலி

இத்தாலியின் மொத்த கடன் தொகை 2.7 டிரில்லியன் டாலராகும். இத்தாலியும் அதிக வருவாயினை கொண்ட நாடுகளில் இதுவும் ஒன்று. அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் கடன் விகிதம் 150.6% ஆகும்.

பூடான்

பூடான்

ஆசியாவிலுள்ள சிறிய நாடுகளில் ஒன்றான பூடானின் கடன் மதிப்பு 3.05 பில்லியன் டாலராக உள்ளது. பூடானின் தனி நபர் வருமானம் மிக குறைவாகும். இதன் கடன் விகிதம் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் 134.94% ஆகும்.

சைப்ரஸ்

சைப்ரஸ்

சைப்ரஸ் நாட்டின் மொத்த கடன் மதிப்பு 25.86 பில்லியன் டாலர் ஆக உள்ளது. இதன் கடன் விகிதம் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் 104.9% ஆகும்.

 பெல்ஜியம்

பெல்ஜியம்

பெல்ஜியத்தின் மொத்த கடன் மதிப்பு 536.48 பில்லியன் டாலராகும். பெல்ஜியனம் அதிக வருமானம் பெறக் கூடிய நாடுகளில் ஒன்றாக இருந்து வருகின்றது. பெரும்பாலும் சேவைத் துறையில் நல்ல வளர்ச்சி கண்டு வரும் பெல்ஜியத்தியத்தின் ஜிடிபியில், 112% கடனை கொண்டுள்ளது.

அமெரிக்கா

அமெரிக்கா

உலகின் முன்னணி பொருளாதார நாடான அமெரிக்காவின் கடன் மதிப்பு 28.43 டிரில்லியன் டாலராகும். அமெரிக்காவில் தனி நபர் வருமானம் அதிகமாகும். எனினும் இங்கு செலவும் அதிகம். அதன் ஜிடிபியில் கடன் 137% பங்கு வகிக்கிறது.

ஸ்பெயின்

ஸ்பெயின்

ஸ்பெயினின் கடன் மதிப்பு அதன் ஜிடிபி மதிப்பில் 119% ஆகும். இதன் கடன் மதிப்பு 1.4 டிரில்லியன் டாலர் ஆகும். பெயின் ஐரோப்பிய நாடுகளின் பட்டியலில் 26வது இடத்தில் உள்ள நாடாகும். இதன் ஜிடிபி விகிதம் முதல் காலாண்டில் 6.3% ஆகும்.

 சிங்கப்பூர்

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் கடன் மதிப்பு 254 பில்லியன் டாலராகும். ஜிடிபியின் இதன் விகிதம் 131.19% ஆகும். தனி நபர் வருமானத்தில் அதிக வருமானம் கொண்ட நாடுகளில் ஒன்றாகவும், சிறந்த வணிகத் தளமாகவும் விளங்குகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Top 10 countries with most debt in 2022: IMF

Top 10 countries with most debt in 2022: IMF/அதிக கடன் வலையில் சிக்கித் தவிக்கும் 10 நாடுகள்.. இந்தியாவும் லிஸ்டில் இருக்கா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.