தேதி குறிச்சாச்சு! லடாக்கின் கோக்ரா-ஹாட் ஸ்பிரிங்ஸில் பகுதியிலிருந்து வெளியேறும் இந்திய-சீன படைகள்

ஸ்ரீநகர்: இந்தியா-சீனா ராணுவ படைகளுக்கிடையே கடந்த ஜூலை 17 அன்று நடைபெற்ற 16வது கட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் இரு நாட்டு படைகளும் சர்ச்சைக்குரிய லடாக்கில் உள்ள கோக்ரா-ஹாட் ஸ்பிரிங்ஸில் இருந்து விலகிக்கொள்வதாக நேற்று அறிவித்தன.

இந்நிலையில் இதனை மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி இன்று உறுதி செய்துள்ளார். அதேபோல, ராணுவம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட உள்கட்டமைப்புகளும் விலக்கிக்கொள்ளப்படுவதாகவும் பதற்றத்திற்கு முன்பு இருந்த நிலையை இந்த பகுதியில் தொடர முயற்சிப்பதாகவும் அறிக்கையில் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.

அதேபோல சீன ராணுவம் தரப்பிலும் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டடுள்ளது.

பிரச்னையின் தொடக்கம்

கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதி கிழக்கு லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட மோதல் காரணமாக இரு நாட்டு எல்லைப்பகுதியிலும் பெரும் பதற்றம் நீடித்து வந்தது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்களும், சீனா தரப்பில் 45 வீரர்களும் உயிரிழந்ததாக சொல்லப்பட்டது. இதனையடுத்து பதற்றத்தை தணிக்க இரு தரப்பிலும் கார்ப்ஸ் கமாண்டர் அளவிலான பேச்சு வார்த்தை தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இராணுவ கட்டமைப்புகள்

இராணுவ கட்டமைப்புகள்

இதற்கிடையில், லடாக் முதல் அருணாச்சலப் பிரதேசம் வரையிலான 3,488 கிமீ உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) முழுவதும் ஹெலிபேடுகள், பதுங்கு குழிகள், ஏவுகணை நிலைகள், சாலைகள் மற்றும் பாலங்கள் போன்ற புதிய இராணுவ உள்கட்டமைப்பை சீனா தொடர்ந்து மேற்கொண்டு வந்தது. நிலைமை இவ்வாறு இருக்க, இருநாடுகளின் உறவை மேம்படுத்துவதற்கு இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்தியா தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.

12ம் கட்ட பேச்சுவார்த்தை

12ம் கட்ட பேச்சுவார்த்தை

இதன் தொடர்ச்சியாக பேச்சு வார்த்தை தீவிரமடைந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி சுமார் 9 மணி நேரம் சீனாவின் எல்லைக்குட்பட்ட மோல்டோ பகுதியில் நடைபெற்ற 12ம் கட்ட பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. இந்த பேச்சுவார்த்தில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், இருதரப்பு படைகளும் கோக்ரா, ஹாட் ஸ்பிரிங் பகுதியிலிருந்து பின்வாங்கப்படுவதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. அதன்படி பின்வாங்கவும் பட்டன. ஆனால் முழுமையாக இல்லை.

16ம் கட்ட பேச்சுவார்த்தை

16ம் கட்ட பேச்சுவார்த்தை

படைப்பிரிவில் ஒரு பகுதி மட்டுமே பின்வாங்கப்பட்டன. மீதமுள்ள படைகளையும் பின்வாங்குவதுதான் பதற்றத்தை நிலையாக தவிர்க்கும் என்று இருநாடுகள் தரப்பிலும் கருதப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இறுதியாக ஜூலை 17 அன்று 16வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இரு தரப்பினரிடையே சுமுகமான முடிவு எட்டப்பட்டதாக இந்தியாவும் சீனாவும் கூட்டறிக்கையில் தெரிவித்தன. இந்த முடிவையடுத்து கோக்ரா-ஹாட்ஸ்பிரிங்ஸ் (PP-15) பகுதியில் உள்ள இந்திய மற்றும் சீன படைகளில் திரும்பப்பெறப்பட்டுள்ளன என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை

அறிக்கை

தற்போது இந்த அறிக்கை மற்றும் ராணுவ நடவடிக்கைகளை மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி இன்று உறுதி செய்துள்ளார். மேலும், “கோக்ரா-ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதியில் உருவாக்கப்பட்ட அனைத்து தற்காலிக கட்டமைப்புகள் மற்றும் இது தொடர்பான உள்கட்டமைப்புகள் அகற்றப்பட்டு பரஸ்பரம் சரிபார்க்கப்படும் என்று இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளனர். இதில் ஒருதலைபட்சமான நடவடிக்கை ஏதும் இருக்காது” என்றும் தெரிவித்துள்ளார். சீனாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்திக் குறிப்பும் இந்த தகவலை உறுதி செய்துள்ளது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

தற்போது இந்த அறிவிப்பின்படி இருதரப்பு வீரர்களும் குறிப்பிட்ட பகுதிகளிலிருந்து வெளியேறி வருகின்றனர். இந்த வெளியேறும் நடவடிக்கைகள் வரும் திங்கள்கிழமைக்குள் நிறைவடையும் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு இரு தரப்பினரும் பின்வாங்கப்படும் நிலையில், கோக்ரா-ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் இந்தியா-சீனா பதற்றத்திற்கு முன்பு இருந்த நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.