அமெரிக்க தமிழ் தொழில்முனைவோர் சங்கத்தின் தேசிய மாநாடு: முதலீட்டாளர்கள் பங்கேற்பு

அமெரிக்க தமிழ் தொழில்முனைவோர் சங்கத்தின் (ATEA) இந்தாண்டுக்கான தேசிய மாநாடு பெல் லேப்ஸ் எனும் வரலாற்று சிறப்புமிக்க இடத்தில் நடைபெற்றது.
இருபதாம் நூற்றாண்டு முழுவதும் ஆயிரக்கணக்கான ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொறியாளர்களை உலகின் மிக முக்கியமான தொழில்நுட்ப முன்னேற்றங்களில் புதுமைப்படுத்துவதில் தாக்கத்தை ஏற்படுத்திய இடத்தில் இம்மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் சப்ளை செயின், டிஜிட்டல் ஹெல்த் போன்ற முதலீடுகளில் புதுப்பிக்கப்பட்ட மற்றும் புதிய ஆர்வத்தைக் காணும் தொழில்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
அமெரிக்க தமிழ் தொழில்முனைவோர் சங்கத்தின் (ATEA) வடகிழக்கின் தலைவரான ராம் நாகப்பன் பங்கேற்பாளர்களை வரவேற்று பேசினார். பொருளாதார மற்றும் தொழில்நுட்பப் போக்குகள் காரணமாக தொழில்முனைவோர்களின் புதிய அலை உருவாகி வருவதால், அரசியல் தலைவர்களின் அனுசரணையுடன் தொழில்முனைவோர் புதிய முகத்தைப் பெறுவதைக் கவனிக்க வேண்டியது அவசியம் என்று மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
CATEALYZE 2022 அதன் முக்கிய கருப்பொருளான “Engage and Take Charge” தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டாளர்களை அமெரிக்காவில் ஒத்துழைத்து புதிய வணிகங்களைத் தொடங்குவதை ஊக்குவிப்பது பலரும் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.