டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 பைக்கில் பிளாக் எடிசன் அறிமுகமானது

டிவிஎஸ் நிறுவனத்தின் பிரபலமான அப்பாச்சி RTR 160 2V மற்றும் RTR 160 4V என இரு பைக்கிலும் பிரத்தியேகமான கருப்பு நிறத்தை பெற்ற Blaze of Black எடிசன் என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முழுமையான கருப்பு நிறத்தை பெற்ற இந்த பைக்குளில் Apache, RTR பேட்ஜ், Hyper Edge ஆகிய எழுத்துக்கள் வெள்ளை நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி, பைக்கில் எவ்விதமான மெக்கானிக்கல் மாற்றங்களும் வழங்கப்படவில்லை.

அடிப்படையான பேஸ் வேரியண்டில் டிரம் பிரேக் பின்புறத்தில் கொண்ட வேரியண்டில் மட்டுமே வந்துள்ளது. மூன்று விதமான ரைடிங் மோடுகளை பெற்றுள்ள அப்பாச்சி  RTR 160 4V பைக்கில் அதிகபட்சமாக 17.37 bhp பவர் மற்றும் 14.73 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது.

அடுத்து 2 வால்வுகளை பெற்ற அப்பாச்சி  RTR 160 2V பைக்கில் 15.82 bhp பவர், 13.85 Nm டார்க் ஆனது வெளிப்படுத்துகின்றது. இரண்டிலும் பொதுவாக 5 வேக கியர்பாக்ஸ் ஆனது வழங்கப்பட்டுள்ளது.

TVS Apache RTR 160 Black Edition

  • Apache RTR 160 4V – ₹ 1,19,990
  • Apache RTR 160 2V – ₹ 1,09,990

(ex-showroom Tamil Nadu)

சமீபத்தில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இத்தாலி சந்தையில் தனது மாடல்களை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

apache rtr 160 2v and rtr 160 4v

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.