இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் நியமனம்

கொழும்பைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான சவூதி அரேபியாவின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக திரு. காலித் ஹமூத் நாசர் அல்தாசம் அல்கஹ்தானி அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் சவூதி அரேபிய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் கொழும்பு 01 இல் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 2022 செப்டம்பர் 16ஆந் திகதி காலை 10.00 மணிக்கு சமர்ப்பித்தார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு.
2022 செப்டம்பர் 20

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.