கர்நாடக அரசு எடுத்த முக்கிய முடிவு.. மழை நீர் வடிகால் மீது கட்டப்பட்ட ஸ்லாப்களை அகற்றும் விப்ரோ..!

பெங்களூர்: பெங்களூர் நகரில் சமீபத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தின் மத்தியில் இந்தியாவின் சிலிக்கான் நகரமே ஸ்தம்பித்து போனது. குறிப்பாக ஐடி நிறுவனங்கள் பலவும் சிக்கல்களை சந்தித்தன.

இதற்கிடையில் கடும் வெள்ளத்திற்கு முக்கிய காரணம் பெங்களூரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதே ஆகும். தண்ணீர் செல்லும் பாதைகள் அடைப்பட்டு தண்ணீர் வெளியேற முடியாமல், மக்கள் வசிக்கும் பகுதி, அலுவலகங்கள், சாலைகளில் பெருகெடுத்து ஓடியது. இதனால் அலுவலகம் செல்ல முடியாத ஊழியர்கள் டிராக்டர்களில் செல்லும் அவலம் ஏற்பட்டது.

இலவசமாக விமானப்பயணம் செய்ய வேண்டுமா? 50 லட்சம் பேருக்கு வாய்ப்பு தரும் நிறுவனம்!

நோட்டீஸ்

நோட்டீஸ்

இதற்கிடையில் தான் விப்ரோ உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களும் கூட சட்ட விரோதமாக ஆக்கிரமிரப்பு செய்து கட்டிடங்களை கட்டியுள்ளதாக, பெங்களூரு மாநகராட்சி சார்பில் பல நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதுமட்டும் அல்ல பல பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியிலும் மாநகராட்சி ஈடுபட்டு வந்தது.

அகற்றும் பணிகள் தீவிரம்

அகற்றும் பணிகள் தீவிரம்

அந்த சமயத்தில் கர்நாடக முதல்வர் தனி நபர்களாக இருந்தாலும் சரி, பெரும் நிறுவனங்களாக இருந்தாலும், சட்டவிரோதமாக ஆக்கிரப்பு செய்யப்பட்டிருந்தால், அவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க கூறியிருந்தார். இதற்கிடையில் தான் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

பலருக்கும் நோட்டீஸ்
 

பலருக்கும் நோட்டீஸ்

இதற்கிடையில் சமீபத்தில் விப்ரோவும் கூட தோடகன்னெல்லி பகுதியில் அமைந்துள்ள விப்ரோவின் கட்டிடம் அனுமதி வாங்கியே கட்டப்பட்டுள்ளது என விளக்கம் கொடுத்திருந்தது. அதோடு BBMPல் இருந்து தங்களுக்கு எந்த அறிவிப்பும் வரவில்லை என கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.

யாருக்கு நோட்டீஸ்?

யாருக்கு நோட்டீஸ்?

இந்த எச்சரிக்கை நோட்டீஸ் விப்ரோ, பிரஸ்டீஸ், பெகமானே டெக் பார்க், கொலம்பியா ஆசியா மருத்துவமனை,எகோ-ஸ்பேஸ், கோபாலன், சலார்பூரியா, காங்கிரஸ் தலைவர் ஹரிஸ் நலபாட், புர்வா பாரடைஸ், ஆர்பிடி நியூ ஹரிசான் கல்லூரி, ஆதர்ஷா ரீட்ரீட் என பல நிறுவனங்களுக்கும் பெங்களூரு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

கான்கிரீட் ஸ்லாப்

கான்கிரீட் ஸ்லாப்

இந்த நிலையில் விப்ரோ நிர்வாகம் அதன் வளாகத்தின் ஒரு பகுதியை மண் அள்ளும் பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தி, தானாக முன் வந்து வடிகால் பகுதியின் மேற்பகுதியில் 2.4 மீட்டருக்கு அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் ஸ்லாப்பினை போட்டிருந்தது.

அகற்றம்

அகற்றம்

இது குறித்து விப்ரோ தாங்கள் சூழலியலை ஆதரிப்பதில் உறுதியாக உள்ளதாகவும், இதற்காக பெங்களூர் மா நகராட்சியுடன் இணைந்து செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளது. விப்ரோ அனுமதிக்கப்பட்ட திட்டங்களின் படி கட்டப்பட்டுள்ளது. எனினும் தண்ணீர் செல்ல வசதியாக சுவரின் ஒரு பகுதியினை திறந்துவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: wipro விப்ரோ

English summary

Wipro removes slab on rainwater drains as Bengaluru Corporation begins demolition of encroachments

Wipro removes slab on rainwater drains as Bengaluru Corporation begins demolition of encroachments/BBMP எடுத்த முக்கிய முடிவு.. மழை நீர் வடிகால் மீது கட்டப்பட்ட ஸ்லாப்கlai அகற்றும் விப்ரோ..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.