திறிபோஷ தொடர்பாக வெளியிடப்படும் கூற்றுக்கள் உண்மைக்குப் புறம்பானவை; சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

திறிபோஷவில் அல்பட்ரொக்சின் (Aflatoxins)   எனும் புற்று நோய்க்காரணி காணப்படுவது குறித்து ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என தான் பொறுப்புடன் கூறுவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இப்பொய்யான குற்றச்சாட்டிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு செயலாளருக்குத் தான் பணித்துள்ளதாகவும் அமைச்சர் பேராசிரியர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஒளடதங்கள் மற்றும் திறிபோஷ பற்றி வெளியாகும் செய்தி தொடர்பாக, பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி விஜேரத்ன எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இவ்வாறு பதிலளித்தார்.

யுனிசெப் அமைப்பு வெளியிட்ட போஷனைக் குறைபாடு தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர விமர்சித்த போது பதிலளித்த அமைச்சர் இந்தத் தகவல்கள் 2016ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வுகளில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் இவ்வாறான பொய்யான கருத்துக்கள் வெளியிடப்படுவதாகவும் அமைச்சர் விவரித்தார்.மேலும் உரையாற்றிய அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல: பிரச்சினை இல்லை என்று கூற முடியாது.

எமது தவறான தீர்வுகளுக்கு அமைய சோள உற்பத்தியில் குறைபாடு காணப்படுகின்றது. அல்பட்ரொக்சின் (Aflatoxins)  பிரச்சினை பற்றிக் கலைந்துரையாடப்பட்டுள்ளது. இது உண்மைக்குப் புறம்பான பிரச்சாரமாகும். இது அசாதாரணமான பேச்சாகும். திறிபோஷாவில் புற்றுநோய்க் காரணிகள் காணப்படுவதாக சமூகத்தில் பயத்தை ஏற்படுத்தும் தவறான செயற்பாடு நடைமுறையிலுள்ளது. மருந்துக் குறைபாடு காரணமாக பதுளை மாவட்டத்தைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர் சத்திரசிகிச்சைப் பிரிவு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
ஆனால் அம்மருந்துகள் கையிருப்பில் உள்ளன. இதனை ஒருங்கிணைந்ததாக அரசியல் செயற்பாடாகப் பார்;ப்பதற்குப் எவ்வித பிண்ணனிகளும் இல்லை.
அதுபோல் திரிபோஷ தொடர்பான பிரச்சினையும் காணப்படுகிறது. இதனை ஊடகங்களில் வெளியிடுகிறார்கள்.இது நம் எல்லோரினதும் பிரச்சினையாகும். இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மனிதாபிமானதாகப் பார்க்க வேண்டும். இதிலிருந்து அரசாங்கமாகத் தப்பித்துக் கொள்ள முடியாது. இதற்கு நிதியும் கிடைத்துள்ளது. சில தொழில் வல்லுநர்கள் அரசியல் இலாபங்களுக்காக செயற்படுவது வருந்தத்தக்கது என அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.