Cinema Roundup: `GOAT' அப்டேட்; வெற்றிமாறன் – கவின் கூட்டணி; மஞ்சும்மல் ரகசியம்; இந்த வார அப்டேட்ஸ்!

சினிமா உலகின் இந்த வார டாப் தகவல்களை இப்போது பார்க்கலாம்.

நடிகர் இம்ரான் கான் – லேகா வாஷிங்டன் காதல் !

‘டெல்லி பெல்லி’, ‘கட்டி பட்டி’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் பிரபலமானவர் பாலிவுட் நடிகர் இம்ரான் கான். இவரும் நடிகை லேகா வாஷிங்டனும் காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் பேச்சு கிளம்பியது.

Lekha washington instagram story

அண்மையில், ஒரு பேட்டியில் இதை நடிகர் இம்ரான் கானே ஒப்புக் கொண்டிருந்தார். இம்ரான் கானின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, இந்த வாரம் நடிகை லேகா வாஷிங்டன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் நடிகர் இம்ரான் கானுடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவேற்றியிருக்கிறார். இருவரும் சில்ஹவுட்டில் இருக்கும் புகைப்படத்தைத்தான் அந்த ஸ்டோரியில் இருந்தது. நடிகை லேகா வாஷிங்டன் ஜெயம் கொண்டான், கல்யாண சமையல் சாதம் ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின்:

கவின் நடிப்பில் வெளியாகியிருக்கிற ‘ஸ்டார்’ திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. நடன இயக்குநர் சதீஸ் இயக்குநராக அறிமுகமாகும் படத்திலும், இயக்குநர் நெல்சன் தயாரிக்கும் படத்திலும் நடித்து வருகிறார். இதற்கு அடுத்தபடியாக, இயக்குநர் வெற்றி மாறன் தயாரிக்கும் திரைப்படத்திலும் கவின் நடிக்கவிருக்கிறார். இதற்கான அறிவிப்பு நேற்றைய தினம் (மே 17) வெளியாகியிருந்தது. ‘மாஸ்க்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தில் ஆண்ட்ரியாவும் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார்.

Vetrimaaran with kavin & Garudan Poster

‘கருடன்’ ரிலீஸ் தேதி !

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கிற திரைப்படம், ‘கருடன்’. இந்த படத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் கதையின் நாயகனாக ‘விடுதலை’ திரைப்படத்தில் நடித்து பாராட்டுக்களைப் பெற்றார் சூரி. இயக்குநர் வெற்றிமாறன் கதை எழுதியிருக்கும் இப்படம், வருகிற மே-31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

ஹாலிவுட் தொடரில் ‘காதல் தேசம்’ ஹீரோயின் தபு !

‘காதல் தேசம்’, ‘இருவர்’, ‘ கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து தமிழ் மக்களிடையே பிரபலமானவர் நடிகை தபு. இவர் தற்போது ஹாலிவுட் வெப் சீரிஸ் ஒன்றில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார். ஹாலிவுட் இயக்குநர் டெனிஸ் வில்லென்யூ இயக்கத்தில் டியூன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியாகியிருந்தது. அத்திரைப்படத்தின் முன் கதையாக ‘டியூன் புரோபசி’ வெப் சீரிஸ் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

Actress Tabu

இந்த வெப் சீரிஸின் டீசர் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இந்த சீரிஸில் நடிகை தபு, சிஸ்டர் பிரான்செஸ்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்திருந்த ‘க்ரூ’ என்ற பாலிவுட் திரைப்படம் வெளியானது.

மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தில் ஓரியோ பிஸ்கட் மேக்கப் :

மலையாளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது, ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படம். இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் நடிகர் சௌபின் சாகிர், ஶ்ரீநாத் பாஸி ஆகியோர் நடித்திருந்தனர். குணா குகைக்குள் சிக்கிக் கொண்ட சுபாஷை குட்டன் காப்பாற்றுவதுதான் இப்படத்தின் கதை. குறிப்பாக இப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகள் பெரிதும் பாராட்டப்பட்டது. படம் ரிலீஸான சமயத்தில் இந்த க்ளைமேக்ஸ் காட்சியின் க்ளிப்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது. குணா குகைக்குள் சிக்கிய சுபாஷுக்கு (ஶ்ரீநாத் பாஸி) ஓரியோ பிஸ்கெட்டை பயன்படுத்தி மேக்கப் செய்திருந்த விஷயம் இப்போது வெளியாகியுள்ளது.

Manjummel Boys

சுபாஷின் உடம்பு முழுவதும் இருக்கும் சேற்றையும் இரத்தத்தையும் காட்சிப்படுத்த ஓரியோ பிஸ்கட்டை பயன்படுத்தியதாகப் பேட்டில் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார் இயக்குநர் சிதம்பரம். இது குறித்து அவர், “இந்த மேக்கப் முறையினால் நிறையவே கஷ்டப்பட்டோம். மேலும், ஶ்ரீநாத் பாஸிக்கு எறும்பு கடி தொந்தரவும் இருந்தது.” எனக் கூறியிருந்தார்.

மீண்டும் இணையும் அயோத்தி கூட்டணி!

அறிமுக இயக்குநர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் கடந்த ஆண்டு ‘அயோத்தி’ திரைப்படம் வெளியாகியிருந்தது. மனிதம் பேசிய இத்திரைப்படம் பட்டி தொட்டியெங்கும் பேசப்பட்டது. மீண்டும் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிக்கவிருக்கிறார். இத்திரைப்படத்தை கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Sasikumar & Vijay

‘GOAT’ அப்டேட் !

நடிகர் விஜய் நடிக்கும் ‘கோட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும்போதே, படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகளையும் தொடங்கியிருக்கிறது படக்குழு. சமீபத்தில் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ‘கோட்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகத் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டிருந்தார். இதுமட்டுமின்றி, இந்த இன்ஸ்டா ஸ்டோரியின் மூலம் லோலா வி.எஃப்.எக்ஸ் நிறுவனத்தில்தான் கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருவதாக தகவல் ஒன்றையும் கொடுத்திருந்தார்.

அமெரிக்காவிலுள்ள இந்த கிராபிக்ஸ் நிறுவனம்தான் மார்வெல் நிறுவனத்தின் ‘கேப்டன் அமெரிக்கா – சிவில் வார்’ திரைப்படத்தின் கிராபிக்ஸ் பணிகளை மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்று (மே 18) இயக்குநர் வெங்கட் பிரபுவும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் லோலா வி.எஃப்.எக்ஸ் நிறுவனத்தில் நடிகர் விஜய்யை வைத்து கிராபிக்ஸ் பணிகள் முடிந்துவிட்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.