மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு.. ரத்தன் டாடா உள்ளிட்ட 3 பேர் பிஎம் கேர்ஸ்- அறங்காவலர்களாக நியமனம்!

டெல்லி: பிஎம் கேர்ஸ் நிதியின் அறங்காவலர்களாக தொழிலதிபர்களும், டாடா சன்ஸ் தலைவருமான ரத்தன் டாடா, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கேடி தாமஸ், மக்களவை முன்னாள் துணை சபா நாயகர் கரிய முண்டா உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து மத்திய அரசு அறிக்கையில் கடந்த 2020ம் ஆண்டின் இருந்து நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றானது மிக மோசமாக பரவத் தொடங்கியது.

அப்போது அவசர தேவைக்கும், நிவாரண உதவிகளுக்கும் அரசு பிஎம் கேர்ஸ் என்ற அமைப்பினை தொடங்கியது.

கர்நாடக அரசு எடுத்த முக்கிய முடிவு.. மழை நீர் வடிகால் மீது கட்டப்பட்ட ஸ்லாப்களை அகற்றும் விப்ரோ..!

பிஎம் கேர்ஸ் ஃபார் சில்ட்ரன்

பிஎம் கேர்ஸ் ஃபார் சில்ட்ரன்

இந்த பிஎம் கேர்ஸ் அமைப்பிற்கு உதவி புரியுமாறு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த உதவிகளை கொண்டு கொரோனா காலத்தில் பெரும் உதவியும் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதோடு பிஎம் கேர்ஸ்-க்கு நிதியுதவியை கொண்டு கடந்த மே மாதம் பிஎம் கேர்ஸ் ஃபார் சில்ட்ரன் என்ற திட்டத்தினையும் தொடங்கியது.

குழந்தைகளுக்கு உதவி

குழந்தைகளுக்கு உதவி

கொரோனா பெருந்தொற்று காலத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இந்த திட்டத்தின் மூலம் உதவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த திட்டத்தின் மூலம் 4345 குழந்தைகளுக்கு உதவி அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பிஎம் கேர்-சின் அறங்காவலர்கள்
 

பிஎம் கேர்-சின் அறங்காவலர்கள்

இதற்கிடையில் தான் பிஎம் கேர்-ஸின் அறங்காவலர்களாக தொழிலதிபதிர்களான ரத்தன் டாடா உள்ளிட்டோர், தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில் முன்னாள் தலைமை கணக்கு தணிக்கையாளர் ராஜிவ் மகரிஷி, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சுதா மூர்த்தி, டெக் ஃபார் இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் ஷா ஆகியோர் இதன் ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

 அடுத்த திட்டம் என்ன?

அடுத்த திட்டம் என்ன?

இது தொடர்பான கூட்டம் டெல்லியில் நடைபெற்ற நிலையில், பிஎம் கேர்ஸ் திட்டம் குறித்தும், பாதிக்கப்படுவர்களுக்கான அவசரகால உதவியை வழங்குவதோடு, அடுத்தடுத்து செயல்திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Tata Sons’ Chairman Emeritus Ratan Tata, 2 others appointed as trustees of PM Cares Fund

Tata son’s Ratan Tata, 2 others appointed as trustees of PM Cares Fund/மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு.. ரத்தன் டாடா உள்ளிட்ட 3 பேர் பிஎம் கேர்ஸ்- அறங்காவலர்களாக நியமனம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.