விப்ரோ அதிரடி.. 300 ஊழியர்கள் திடீர் பணிநீக்கம்.. காரணம் Moonlighting..!!

இந்தியாவின் 4வது பெரிய ஐடி சேவை நிறுவனமான விப்ரோ ஆரம்பம் முதலே Moonlighting குறித்துக் கடுமையாக எச்சரித்து வந்த நிலையில் தற்போது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

Moonlighting குறித்த குழப்பத்தில் இருந்த ஐடி நிறுவனங்களுக்கு விப்ரோ நிறுவனத்தின் செயல் அதிர்ச்சி அடையச் செய்தது மட்டும் அல்லாமல் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் டெக் துறையில் ஊழியர்கள் இனி உஷாராக இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. work from anywhere ஆப்ஷன் உடன் வேலை..!!

விப்ரோ நிர்வாகம்

விப்ரோ நிர்வாகம்

விப்ரோ நிர்வாகம் சுமார் 300 ஊழியர்கள் தனது சக போட்டி நிறுவனங்களுக்குப் பணியில் இருந்துகொண்டே வேலை செய்து வந்தது கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் விப்ரோ நிறுவனம் இந்த 300 ஊழியர்களையும் பணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதாக ரிஷாத் ப்ரேம்ஜி இன்று தெரிவித்துள்ளார்.

விதிமுறை மீறல்

விதிமுறை மீறல்

ஊழியர்கள் தங்களது பணி நியமனத்தில் இருக்கும் விதிமுறைகளில் மிகவும் முக்கியமான நிறுவனத்திற்கு நேர்மையாகவும், உண்மையாக இருக்க வேண்டிய விதிமுறையை மீறியுள்ள காரணத்தால் பணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர் என விப்ரோ நிர்வாகத் தலைவர் ரிஷாத் ப்ரேம்ஜி 49வது அகில இந்திய மேலாண்மை சங்க மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

கூடுதல் வருமானம்
 

கூடுதல் வருமானம்

ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வரும்போதே கூடுதல் வருமானத்திற்காக நிறுவனத்தின் விதிமுறைகளை மீறி மற்றொரு நிறுவனத்திற்குப் பணியாற்றுவது தான் Moonlighting. இதைச் சீட்டிங் வேலை எனப் பல வாரங்களுக்கு முன்னரே ரிஷாத் ப்ரேம்ஜி தனது டிவிட்டரில் பதவிட்ட நிலையில், இதைச் சீரியஸ் ஆக எடுத்துக்கொள்ளாத 300 ஊழியர்கள் தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

Moonlighting கொள்கை

Moonlighting கொள்கை

ஊழியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனத்தில் பணியாற்றுவதை ஸ்விக்கி அனுமதி அளித்து அதிகாரப்பூர்வமாக Moonlighting கொள்கை தனது நிறுவன விதிமுறைகளில் ஒன்றாக மாற்றியுள்ளது. இதேவேளையில் டெக் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் சிபி குருநானி ஊழியர்கள் 2வது வேலையைத் தேர்வு செய்வதில் தனது எந்த ஆட்சேபனை இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

டிசிஎஸ்

டிசிஎஸ்

டிசிஎஸ் நிறுவனத்தின் சிஓஓ கணபதி சுப்ரமணியனை Moonlighting பிரச்சனையை நாங்கள் மிகவும் சீரியஸான குற்றமாகப் பார்க்கிறோம், இதேபோல் இதை ஒழுக்கமற்ற செயலாகவும் டிசிஎஸ் நிர்வாகம் கருதுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

இன்போசிஸ்

இன்போசிஸ்

டிசிஎஸ் நிறுவனத்திற்கு முன்னதாக இன்போசிஸ் நிறுவனம் யாராவது இரண்டு பணிகளில் ஈடுபட்டு உள்ளது தெரிய வந்தால் ஊழியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தனது ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இது மட்டும் அல்லாமல் ஊழியர்களை டிஸ்மிஸ் செய்யப்படும் அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இன்போசிஸ் தெரிவித்து இருந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Wipro dismissed 300 IT employees found working with competitors moonlighting is violation says Rishad Premji

Wipro dismissed 300 IT employees found working with competitors moonlighting is a violation says Rishad Premji

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.