தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் வளர்ச்சி அதிகரிக்கும்: ஜே.பி நட்டா

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பாராளுமன்ற தேர்தல் வியூகம் குறித்து கட்சியின், மாநில , மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகளிடம் பேசினார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசும் போது, தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் பல்வேறு மக்களிடம் கலந்துரையாடியதில் அதிகளவில் பெண்கள், இளைஞர்கள் பாஜக சேர நினைக்கின்றனர் என்பது புரிந்தது. அவர்கள் பாஜக ஆட்சிக்கு வந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கின்றனர் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி சிறப்பாக நடந்து வருகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே அரசாக இருந்தால் பணிகள் வேகமாக நடக்கும். இதை தான் மோடி சொல்கிறார். பாஜக ஆளும் மாநிலங்கள் சிறப்பாக உள்ளன. அதேபோல தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் வளர்ச்சி அதிகரிக்கும். ஆனால் துர்திஷ்டவசமாக திமுக மாநிலத்தில் ஆட்சி நடத்த தெரியாமல், எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை கூறி வருகின்றனர்’ என்றார்.

சில விஷயங்களில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் தான் மக்களுக்கு பலன் கிடைக்கும். நான் சொன்னதை எம்பிகள் தவறாக புரிந்து கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். மதுரை எய்ம்ஸ்க்கு 95 சதவீதம் நிதி, கட்டமைப்பு பொருட்கள் ஒதுக்கியதாக தான் கூறினேன். ஆனால் 95 சதவீதம் பணி முடிந்ததாக நான் சொல்லவில்லை. பிரதமர் மோடி தமிழகத்திற்கு மிகுந்த ஆதரவு அளித்து வருகிறார். வளர்ச்சிக்கு தேவையான நிதியை அளித்து வருகிறார். திமுக குடும்ப அரசியல், ஊழல், கட்டப்பஞ்சாயத்து செய்து வருகிறது. தமிழகத்தில் தற்போதைய நிலையில் வளர்ச்சி இல்லை. பாஜக ஆட்சிக்கு வந்தால் அனைத்து துறையிலும் வளர்ச்சி இருக்கும், என்றார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.