பள்ளிகளுக்காக நிதி ஒதுக்குவாரா முதலமைச்சர்? ஆர் பி உதயகுமார் கேள்வி

வடகிழக்கு பருவமழை ஆய்வு கூட்டத்தில் தமிழகத்தில் சேதமடைந்த 5,583 பள்ளி கட்டிங்களை சீர் செய்ய சிறப்பு நிதியை முதலமைச்சர் ஒதுக்குவாரா என 
எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் கேள்வி கேட்டுள்ளார். இது குறித்து பேசிய அவர், ‘வடகிழக்கு பெருமழை குறித்து நாளை மறுதினம் முதலமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது. பருவமழை குறித்து மக்களுக்கு தகுந்த விழிப்புணர்வை வழங்கி மக்களை தயார் நிலையில் உருவாக்க வேண்டும். அதேபோல் கால்நடை, வேளாண் பொருட்கள் ஆகியவற்றை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வடகிழக்கு பருவமழையின் போது பழுதடைந்த தனியார் கட்டிடங்கள், அரசு கட்டிடங்கள் ஆகியவற்ரை ஆய்வு செய்ய வேண்டும். வகுப்பறையை சீர் செய்யாமல் பல பள்ளிகளில் மாணவர்கள் மரத்தின் நிழலில் படித்து வருகின்றனர். கடந்த அம்மா ஆட்சி காலத்தில் எடப்பாடியார் ஆட்சி காலத்தில் நவாடு திட்டத்தின் கீழ் புதிய பள்ளி கட்டிடங்கள் உருவாக்கப்பட்டன.

இந்த ஒன்னரை ஆண்டு காலம் புதிய பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. குறிப்பாக தமிழகத்தில் 5,583 பள்ளிகள் சேதமடைந்ததாக அதிர்ச்சியான புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. வடகிழக்கு பருவமழை குறித்து முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் இதை கவனத்தில் கொண்டு சீர் செய்ய சிறப்பு நிதியை ஒதுக்க முதலமைச்சர் முன்வருவாரா? 

ஏற்கனவே ஆண்டுக்கு 100 கோடி சீர் செய்ய ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் சேதமடைந்த இந்த கட்டிடங்களை சீர் செய்யசிறப்பு  நிதியை ஒதுக்கி தர  முதலமைச்சர் முன்வர வேண்டும். எடப்பாடியார் ஆட்சி காலத்தில் குடிமராமத் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் மூலம் தமிழகத்தில் நிலத்தடி நீர் உயர்ந்தது. தற்போது அந்த திட்டம் செயல்படவில்லை என்று கூறினார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.