அணு ஆயுதங்களை கைவிட மாட்டேன்: சூளுரைக்கும் கிம் ஜாங் உன்னின் அதிரடி ஏவுகணை

தென் கொரிய மற்றும் அமெரிக்கப் படைகள் கூட்டு கடற்பயிற்சி மேற்கொள்ளவிருக்கும் நிலையில், அதற்கு முன்னதாக வட கொரியா அதன் கிழக்குக் கடற்கரையிலிருந்து கடலில் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியது. கொரிய தீபகற்பத்திற்கு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் இந்த வாரத்தில் வரவிருக்கும் நிலையில், வட கொரியாவின் இந்த ஏவுகணை சோதனை, சவால்விடும் நடவடிக்கை என சர்வதேச நிபுணர்கள் கருதுகின்றனர்.

தென் கொரியாவின் இராணுவத்தின் கூற்றுப்படி, வடக்கு பியோங்யாங்கின் டேச்சோன் பகுதிக்கு அருகிலுள்ள ஒரு இடத்திலிருந்து காலை 7 மணிக்கு முன்னதாக ஒரு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை சுட்டு பரிசோதிக்கப்பட்டது.

மேலும் படிக்க | ரஷ்யா உக்ரைன் போர்; தொடரும் ரஷ்ய தொழிலதிபர்களின் மர்ம மரணங்கள்!

இந்த ஏவுகணையானது ஒழுங்கற்ற பாதையில் பறந்திருக்கலாம் என்றும், அதிகபட்சமாக 50 கிமீ உயரத்தை எட்டியதாக நம்புவதாகவும் ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் யசுகாசு ஹமாடா தெரிவித்தார். ஹமாடாவின் கூற்றுப்படி, கடல் அல்லது விமானப் போக்குவரத்து சிக்கல்கள் குறித்து எந்த அறிக்கையும் இல்லை, அது ஜப்பானின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே இருந்தது என்று கருதப்படுகிறது.

அணுசக்தியால் இயங்கும் யுஎஸ்எஸ் ரொனால்ட் ரீகன் என்ற விமானம் தாங்கி கப்பல், தென் கொரியப் படைகளுடன் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக தென் கொரியாவிற்கு வருவதும் குறிப்பிடத்தக்கது. 

இதற்கு முன்னதாக, ஜூன் மாத தொடக்கத்தில் ஒரே நாளில் எட்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவிய வடகொரியா, தற்போது பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறியதற்காக, வட கொரியா மீது கூடுதல் தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா கோரிக்கை விடுக்கிறது.

மேலும் படிக்க | உக்ரைனில் போரினால் முடங்கிய விவசாய உற்பத்தி; வயல்களில் பொழியும் குண்டு மழை!

வட கொரியா அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் முந்தைய கூட்டுப் பயிற்சிகள் தொடர்பாக வட கொரியா முன்னதாக குறை கூறியுள்ளது என்பதும், தற்காப்பு மற்றும் விண்வெளி ஆய்வுக்கான ஐ.நா தீர்மானங்களை இந்த போர்ப் பயிற்சிகள் மீறுவதாக இருப்பதாகவும் வடகொரியா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கொரிய பிராந்தியத்தில் பதற்றஙக்ளை அதிகரிக்கும் நடவடிக்கைகளை தவிர்க்குமாறு அனைத்து தரப்பினரையும் வலியுறுத்திய ரஷ்யாவும் சீனாவும்,, கூட்டு பயிற்சிகளை விமர்சித்ததுடன், வடகொரியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை தளர்த்தவும் அழைப்பு விடுத்துள்ளன.

2017 ஆம் ஆண்டிலிருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை முதன்முதலில் சுட்டு பரிசோதித்த வட கொரியா, இந்த ஆண்டு இதுவரை இல்லாத வகையில் ஏவுகணை சோதனைகளை நடத்தியதைத் தொடர்ந்து, அமெரிக்காவும் தென் கொரியாவும் பியோங்யாங்கைத் தடுக்கும் முயற்சியில் தங்கள் இராணுவப் பயிற்சிகள் மற்றும் வலிமையைக் காட்டுவதாக அறிவித்தன. 

மேலும் படிக்க | ரஷ்யாவுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்ததே இல்லை: வடகொரியா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.