தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.. இன்றைய விலை நிலவரம்.!

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர்.

அதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் நிலவி வந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை (செப்டம்பர் 24) நிலவரப்படி ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,650க்கும், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.37,200ங்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் கிராமுக்கு ரூ.1 ரூபாய் அதிகரித்து ரூ.4,651க்கும், சவரனுக்கு ரூ.8 அதிகரித்து ரூ.37,208க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், வெள்ளியின் விலை சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 80 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.60.70 விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிலோவுக்கு ரூ.800 குறைந்து ரூ.60,700 விற்பனை செய்யப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.