அதிவேக 5ஜி சேவை இன்று தொடக்கம்; ஜனாதிபதி முர்முவின் பள்ளிக்கு அடித்தது யோகம்.! ஒடிசாவில் ஆசிரியர்கள், மாணவர்கள் மகிழ்ச்சி

மயூர்பஞ்ச்: இன்று முதல் 5ஜி சேவை தொடங்கிய நிலையில் ஜனாதிபதி முர்முவின் பள்ளிக்கு இந்த சேவை வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஒடிசாவில் ஆசிரியர்களும், மாணவர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்திய மொபைல் காங்கிரஸின் தொடக்க விழாவில் பங்ேகற்ற பிரதமர் மோடி, இன்று 5ஜி தொலைதொடர்பு சேவையை  தொடங்கிவைத்தார். இந்த சேவை படிப்படியாக அடுத்த சில ஆண்டுகளில் நாடு முழுவதும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் மறைந்த கணவருக்காக நிறுவப்பட்ட எஸ்எல்எஸ் ரெசிடென்ஷியல் பள்ளிக்கு 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படுகிறது.

இந்தப் பள்ளி ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டம் பஹாத்பூரில் உள்ளது. நாட்டிலேயே முதன் முறையாக அதிவேக 5ஜி சேவையை பயன்படுத்தும் முதல்பள்ளியாக ஜனாதிபதியின் கணவரால் நிறுவப்பட்ட பள்ளிக்கு கிடைத்துள்ளது. இத்திட்டத்தால் அப்பள்ளியின் ஆசிரியர்களும் மாணவர்களும் நாட்டிலேயே முதன்முறையாக 5ஜி சேவையைப் பயன்படுத்தும் முதல் பயனர்களாக இருப்பார்கள். முன்னதாக நேற்று 5ஜி சேவையை வழங்குதற்காக ரிலையன்ஸ் ஜியோ லிமிடெட்டின் நிர்வாகிகள், சம்பந்தப்பட்ட பள்ளி வளாகத்தில் தற்காலிக 5ஜி கோபுரத்தை அமைத்தனர்.

இதுகுறித்து பள்ளி நிர்வாகிகள் கூறுகையில், ‘ஜனாதிபதி திரவுபதி முர்முவின் கணவர் ஷியாம் சரண் முர்மு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்தார். அதனால் கணவர் வாழ்ந்த மூதாதையர் இடத்தை அவரது மாமியார், ரெசிடென்ஷியல் பள்ளியாக மாற்றினார். அப்போதிருந்தே திரவுபதி முர்மு இந்த பள்ளியின் வளர்ச்சிக்கு பல்வேறு வகைகளில் உதவினார். ஜார்கண்ட் ஆளுநராக இருந்த காலத்திலும், பள்ளிக்கு தவறாமல் வந்து ெசல்வார். பழங்குடியினர் அதிகம் வசிக்கும் இந்தக் கிராமப் பள்ளியின் தலைவராகவும் திரவுபதி முர்மு இருந்தார். குடியரசு தலைவராக தேர்வான பின்னர், அந்தப் பதவியில் இருந்து விலகினார். தற்போது அவரது மகள் பள்ளியின் தலைவராக உள்ளார்’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.