மன்னர் சார்லஸ் முதல் வெளிநாட்டு பயணம்: பிரதமர் லிஸ் ட்ரஸ் அழுத்தத்தால் விலக்கிக் கொள்ளப்பட்டதா?


COP27 மாநாட்டில் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் கலந்து கொள்ள மாட்டார்.

பிரதமர் மன்னருக்கு உத்தரவிடும் யோசனை அபத்தமானது.

இந்த ஆண்டு எகிப்தில் நடைபெற உள்ள COP27 மாநாட்டில் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் கலந்து கொள்ள மாட்டார் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

மகாராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்ததை அடுத்து அவரது மகன் மூன்றாம் சார்லஸ் பிரித்தானியாவின் புதிய மன்னராக பொறுப்பேற்று கொண்டார்.

இதையடுத்து பிரித்தானியாவின் புதிய மன்னர் மூன்றாம் சார்லஸின் முதல் வெளிநாட்டு பயணம் குறித்த எதிர்பார்ப்புகள் வெளிவரத் தொடங்கின.

மன்னர் சார்லஸ் முதல் வெளிநாட்டு பயணம்: பிரதமர் லிஸ் ட்ரஸ் அழுத்தத்தால் விலக்கிக் கொள்ளப்பட்டதா? | Uk King Charles Will Not Attend Cop27 In Egyptsky news

சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் ஆர்வமுள்ள பிரதிநிதியான மன்னர் மூன்றாம் சார்லஸ் நவம்பரில் எகிப்து நகரமான ஷர்ம் எல் ஷேக்கில்(Sharm el Sheikh) நடைபெற இருக்கும் ஐ நா காலநிலை மாநாடு COP27-ல் மன்னரான பிறகு அவரது முதல் வெளிநாட்டு பயணமாக கலந்து கொள்வார் என்று ஊகங்கள் வெளிவந்தன.

இந்நிலையில், நவம்பரில் நடைபெறவுள்ள ஐ நா காலநிலை மாநாட்டில் மன்னர் மூன்றாம் சார்லஸ் கலந்து கொள்ள மாட்டார் என பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியுள்ளது.

காலநிலை மாநாட்டிற்கு அவர் வேறு வழிகளில் அவரது ஆதரவை காட்ட முடியுமா என்று விவாதித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலானது, பிரதமர் லிஸ் ட்ரஸ் மற்றும் நம்பர் 10 ஆலோசகர்கள் மன்னரை cop27ல் கலந்து கொள்ள கூடாது என அறிவுறுத்தியதாக வெளிவந்த செய்தியை தொடர்ந்து வந்துள்ளது.

மன்னர் சார்லஸ் முதல் வெளிநாட்டு பயணம்: பிரதமர் லிஸ் ட்ரஸ் அழுத்தத்தால் விலக்கிக் கொள்ளப்பட்டதா? | Uk King Charles Will Not Attend Cop27 In Egyptsky news

பிரதமரின் உத்தரவின் பெயரிலேயே மன்னர் மூன்றாம் சார்லஸ் cop27 கலந்து கொள்ள போவது இல்லை என்று அறிவித்ததாக வெளிவந்த செய்திக்கு நம்பர் 10 உறுப்பினர் ஸ்கை நியூஸ் தெரிவித்த விளக்கத்தில், பிரதமர் லிஸ் ட்ரஸ், மன்னருக்கு உத்தரவிடும் யோசனை அபத்தமானது என தெரிவித்தார்.

கூடுதல் செய்திகளுக்கு: எரிவாயு கசிவு நின்றுவிட்டது: நோர்ட் ஸ்ட்ரீம் 2 செய்தி தொடர்பாளர் வழங்கிய முக்கிய தகவல்

மன்னர் சார்லஸ் ஐ நா காலநிலை மாநாட்டில் பல ஆண்டுகளாக கலந்து கொண்டு உள்ளார், கடந்த முறை கிளாஸ்கோவில் cop 26 க்கான தொடக்க விழாவில் முக்கிய உரைகளில் ஒன்றை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.