பாடகர் சித்து மூஸ்வாலா படுகொலையில் தேடப்பட்டு வந்த கோல்டி பிரர்… அமெரிக்காவில் சுட்டுக்கொலை!

பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களின் மிகப்பெரிய நெட்ஒர்க்குடன் மாஃபியா கூட்டத்தை நடத்தி வருபவன் லாரன்ஸ் பிஷ்னோய். பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலாவை பட்டப்பகலில் சுட்டுக்கொலை செய்ததில் முக்கிய குற்றவாளியும் லாரன்ஸ் பிஷ்னோய்தான். நடிகர் சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்த ஆள் அனுப்பியதிலும் லாரன்ஸ் பிஷ்னோய்தான் முக்கிய குற்றவாளியாகும். லாரன்ஸ் பிஷ்னோய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதால் அவனுக்காக வெளியில் இருந்து அனைத்து வேலைகளையும் செய்து வந்தவன் கோல்டி பிரர். இருவரும் நெருங்கிய நண்பர்கள்.

கோல்டி பிரர் மாணவர் விசாவில் கனடா சென்று அங்கேயே பதுங்கிக்கொண்டார். கனடாவுக்கும், அமெரிக்காவுக்கும் அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருப்பான். இந்நிலையில் நேற்று அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கோல்டி பிரரை அவனது எதிரிகள் பேர்மவுண்ட் என்ற ஹோட்டலில் வைத்து சுட்டுக்கொலை செய்துவிட்டனர். இப்படுகொலை குறித்து இந்திய புலனாய்வுத்துறை அல்லது பாதுகாப்புத்துறை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

கோல்டி பிரர் மற்றும் சித்துமுஸ்வாலா

சதிந்தர்ஜித் சிங் என்ற பெயர் கொண்ட கோல்டி பிரர் கான்ஸ்டபிள் மகனாவார். உள்ளூரில் கிரிமினல் வேலைகளில் ஈடுபட்டு படிப்படியாக பஞ்சாப் மட்டத்தில் கோல்டி பிரர் வளர்ந்தான். ஒரு கட்டத்தில் மாணவர் விசாவில் கனடா சென்று அங்கு சட்டவிரோத ஆயுத வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தான். இதனால் அவனுக்கு கனடாவில் அதிக அளவில் எதிரிகள் உண்டு. மத்திய அரசின் கனடாவில் தேடப்படும் 25 பேர் பட்டியலில் கோல்டி பிரர் பெயரும் இடம் பெற்று இருந்தது.

கோல்டி பிரர் ஆயுதங்கள் வெடிமருந்துகளை ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு டிரோன் மூலம் கடத்துவதில் கைதேர்ந்தவன் என்று அறியப்படுகிறான். அவனுக்கு எதிராக கடந்த 2022ம் ஆண்டு மத்திய அரசு ரெட்கார்னர் நோட்டீஸ் வெளியிட்டது. இதற்கு முன்பு கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட போது அதில் இந்தியாவிற்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம் சாட்டியது. இதனால் இந்தியா மற்றும் கனடா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.