முல்லைத்தீவு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு தீ அணைப்பு பயிற்சி

 

முல்லைத்தீவு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு
தீ அணைக்கும் பயிற்சி முகாம்
நேற்றைய தினம் (03) மாவட்ட செயலக வளாகத்தில் இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட செயலக உற்பத்தித் திறன் மேம்பாட்டு பிரிவினரின் ஏற்பாட்டில் இந்த பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தீ அனர்த்தங்கள், முன்னாயத்த முன்னெச்சரிக்கை செயற்பாடுகள், தீ அனர்த்த கருவிகளின் வகைகள், அவற்றினை கையாளும் முறைமைகள், அனர்த்த அபாய ஒலி, அலுவலக அனர்த்த ஒன்றுகூடல் இடம், அவசர வழி கையாளுகை தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டு செயல்முறை ரீதியான ஒத்திகை பயிற்சியும் வழங்கப்பட்டது.

இதன்போது தீ அனர்த்தத்தின் போது தீயை கட்டுப்பாட்டினுள் கொண்டு வருவது தொடர்பில் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

இதன் வளவாளராக முல்லைத்தீவு மாவட்ட செயலக பிரதம உள்ளகக் கணக்காய்வாளரும், உற்பத்தித் திறன் மேம்பாட்டு பிரிவின் பிரதம இணைப்பாளருமான கே.லிங்கேஸ்வரன் கலந்து கொண்டிருந்தார்.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்) க.கனகேஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) எஸ்.குணபாலன், பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.