பாரிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ள உலக பொருளாதாரம் – இலங்கைக்கும் கடும் பாதிக்கப்படும்


அடுத்த ஆண்டு உலகப் பொருளாதாரம் கடுமையான மந்தநிலை ஏற்படும் அபாயம் உள்ளதென உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா – வொஷிங்டனில் நடைபெறும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் 2022 ஆண்டு கூட்டு மாநாட்டில் வைத்தே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அபாயத்தால் உலகின் பல நாடுகள் பொருளாதாரச் சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்பதை அங்கு அவர்கள் காட்டியுள்ளனர்.

பொருளாதார மந்தம்

பாரிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ள உலக பொருளாதாரம் - இலங்கைக்கும் கடும் பாதிக்கப்படும் | Why Is Sri Lanka Economic Crisis

வளர்ந்த நாடுகளின் பொருளாதாரத்தில் ஏற்படும் மந்தநிலை மற்றும் விரைவான பணவீக்கம் வளரும் நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளன.

அடுத்த ஆண்டு உலகப் பொருளாதாரம் கணிசமான அளவு வீழ்ச்சியடையும் ஆபத்து இருப்பதாக உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பஸ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் கடன் சுமையும் அதிகரிக்கலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த பொருளாதார மந்தநிலையின் தாக்கத்தை உலகின் வலிமையான பொருளாதாரங்களும் உணரும் என சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டினா ஜோர்ஜீயேவா கூறியுள்ளார்.

உலகப் பொருளாதாரம்

பாரிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ள உலக பொருளாதாரம் - இலங்கைக்கும் கடும் பாதிக்கப்படும் | Why Is Sri Lanka Economic Crisis

சர்வதேச நாணய நிதியத்தின் கணக்கீடுகளின்படி, இந்த ஆண்டு உலகப் பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கு கடும் வீழ்ச்சியடைய அதிக ஆபத்து உள்ளது.

மேலும் அடுத்த ஆண்டு தொடர்ந்து இரண்டு காலாண்டுகளுக்கு பொருளாதார வளர்ச்சி குறைய வாய்ப்பு உள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 2026ஆம் ஆண்டுக்குள் உலக உற்பத்திப் பொருளாதாரம் 04 டிரில்லியன் டொலர்களை இழக்கும். சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகளின்படி, நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் கொடுப்பனவு சமநிலையில் 09 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பற்றாக்குறை ஏற்படும் என மேலும் கணிக்கப்பட்டுள்ளது.


சர்வதேச நாணய நிதியம்

பாரிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ள உலக பொருளாதாரம் - இலங்கைக்கும் கடும் பாதிக்கப்படும் | Why Is Sri Lanka Economic Crisis

தற்போதைய சூழ்நிலையை சமாளிக்கும் திட்டங்கள் போதுமானதாக இல்லாவிட்டால் உலகம் நெருக்கடியின் விளிம்பில் நிற்கும் என சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டினா தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, உலகில் வலுவான பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகள் வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் மற்றும் வளரும் நாடுகளுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

இந்த நெருக்கடியால் இலங்கை கடுமையாக பாதிக்கபடும் என இலங்கை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.