இலங்கையின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கான இராஜதந்திர சம்பிரதாயங்கள் குறித்த அமர்வு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் முன்னெடுப்பு

தமது உத்தியோகபூர்வக் கடமைகளை எளிதாக்குவதற்கான இராஜதந்திர சம்பிரதாயங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்த ஒரு நாள் விளக்க அமர்வை இலங்கை பொலிஸின் 30 சிரேஷ்ட அதிகாரிகள் குழுவிற்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு வெற்றிகரமாக நடாத்தியது. இந்த அமர்வு 2022 அக்டோபர் 13ஆந் திகதி அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது.

வியன்னா சாசனம் மற்றும் இராஜதந்திர சிறப்புரிமைகள் சட்டத்தின்படி சர்வதேச நெறிமுறைகள், நடைமுறைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் உள்வரும் வெளிநாட்டுப் பிரமுகர்களின் விஜயங்களை ஒழுங்குபடுத்தும் முறைகள் உட்பட பல ஊடாடும் அமர்வுகளை இந்தத் திட்டம் கொண்டிருந்தது.

இராஜதந்திர வாழ்க்கையில் நிபுணத்துவம் மற்றும் விரிவான அனுபவமுள்ள அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சின் சட்ட உத்தியோகத்தர்கள் வளவாளர்களாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தனவின் சார்பில் மேலதிக செயலாளர் கலாநிதி ஏ.எஸ்.யு. மென்டிஸ் ஆரம்ப உரையை நிகழ்த்தினார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2022 அக்டோபர் 14

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.