‛‛விவசாயிகளுக்கு மலிவான விலையில் உரங்கள்: பிரதமர் மோடி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: ‘ஒரே நாடு ஒரே உரம்’ திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மலிவான விலையில், தரமான உரங்கள் வழங்கப்படும் என பிரதமர் மோடி கூறினார்.

latest tamil news

டில்லியில் ஒரே நாடு, ஒரே உரம் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். மேலும் பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கிக் கணக்கில், ரூ 16 ஆயிரம் கோடியை, பிரதமர் மோடி விடுவித்தார்.

இதன் மூலம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் தலா ரூ. 2.000 பெற்று பலன் பெறுவர். இதையடுத்து, பாரத யூரியா பைகளையும் அறிமுகப்படுத்தினார்.

latest tamil news

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான 12வது தவணை அனுப்பப்பட்டுள்ளது.

‘ஒரே நாடு ஒரே உரம்’ :

‘ஒரே நாடு ஒரே உரம்’ திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மலிவான விலையில், மிகவும் தரமான உரங்கள் வழங்கப்படும். உரங்களின் உற்பத்தி தொழில்நுட்பம் மற்றும் தரத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஏராளமான விவசாயிகள் பலன் அடைவார்கள்.

latest tamil news

தொழில்நுட்பம் வளர்ச்சி:

உரங்களின் உற்பத்தி தொழில்நுட்பத்தின் மாற்றத்தால், விவசாயப் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கும். பயிர் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும். உலகளவில் வேளாண் பொருட்களை உற்பத்தி செய்யும் மையமாக, இந்தியா விரைவில் உருவாகும். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.