தகுதியுடைய ஆசிரியர்களை உருவாக்க தேசிய பல்கலைக்கழகங்கள் நிறுவப்படும்

ஆசிரியர்களை உருவாக்கும் வகையில் தேசிய  பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அமைச்சில், அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கல்லூரிகளை பல்கலைக்கழக மட்டத்திற்கு கொண்டு வர பல கோரிக்கைகள் கிடைக்க பெற்றிருப்பதாகவும், அதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஆசிரியர் சேவைக்காக தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களை உருவாக்கப்படவுள்ளதாகவும், பாடத்திட்டத்திற்கு ஏற்ப மாணவர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட உள்ளதாகவும் ,இந்த தகவலை அமைச்சரவைப் பத்திரத்துடன் சேர்த்து உருவாக்குவதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாககவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதில் மூன்று வருட கோட்பாட்டு ரீதியான பயிற்சியையும் ஒரு வருட ஆசிரியர் பயிற்சியையும் வழங்க எதிர்ப்பார்த்துள்ளதாகவும்  கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் 4 ஆண்டுக்குள் சிறந்த, தகுதியுடைய ஆசிரியர்களை உருவாக்கி, ஆசிரியர் கல்வி சேவையையும் வழங்குவதற்காகவே இந்த ஆசிரியர் பல்கலைக்கழகத்தை கட்டியெழுப்புவதற்கு மிகவும் கடினமாக உழைத்து வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.