எந்தெந்த இடங்களில் மழைக்கு வாய்ப்பு? வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த ஐந்து தினங்களுக்கான மழை பற்றிய முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது.

அந்த் அறிவிப்பில், “இன்றும் நாளையும் (25.10.2022, 26.10.2022) தென் தமிழக மாவட்டங்கள் (ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை), டெல்டா மாவட்டங்கள் (தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை), நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

27.10.2022: தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

28.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

29.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

சுறளகோடு (கன்னியாகுமரி) 7, கயத்தாறு ARG (தூத்துக்குடி) 5, கன்னிமார் (கன்னியாகுமரி) 4, பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி), திருமங்கலம் (மதுரை), கீழ் கோதையார் ARG (கன்னியாகுமரி), கயத்தாறு (தூத்துக்குடி), சிவகாசி (விருதுநகர்), பூதபாண்டி (கன்னியாகுமரி), ராம்நாடு கே.வி.கே. ராமநாதபுரம்) தலா 3 சிற்றாறு (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), கடம்பூர் (தூத்துக்குடி), வட்டானம் (ராமநாதபுரம்), திருநெல்வேலி (திருநெல்வேலி) தலா 2, வெம்பக்கோட்டை (விருதுநகர்), கடலாடி (ராமநாதபுரம்), விருதுநகர் AWS (விருதுநகர்), வைப்பார் (தூத்துக்குடி), தூத்துக்குடி (தூத்துக்குடி), சங்கரன்கோவில் (தென்காசி), பாளையங்கோட்டை (திருநெல்வேலி), பல்லடம் (திருப்பூர்) தலா 1

மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.