இலங்கையில் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை! அமைச்சர் அறிவிப்பு


இலங்கையில் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தடையொன்று விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சஃப்பாரி வழிகாட்டுதல் இன்றி எந்தவொரு தேசிய பூங்காவிற்குள்ளும் தனியார் வாகனங்கள் உட்பிரவேசிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்த அமரவீரவின் அறிவிப்பு

இந்த விடயத்தை வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை! அமைச்சர் அறிவிப்பு | Private Vehicles Prohibited Enter National Park

யால சரணாலயத்திற்குள் பிரவேசித்து விலங்குகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையிலேயே குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் யால சரணாலய விவகாரம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த நபர்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுத்து அரசியல் தலையீடுகள் இன்றி சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தனவும் அண்மையில் தெரிவித்திருந்தார்.

காணொளியை மையப்படுத்தி விசாரணை

இலங்கையில் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை! அமைச்சர் அறிவிப்பு | Private Vehicles Prohibited Enter National Park

எனவே குறித்த தரப்பினர் அதிவேக வீதி சட்டத்தை மீறி பயணித்ததாக வெளியாகும் காணொளியை மையப்படுத்தி இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதற்கமைய, அதிவேக வீதியின் சிசிடிவி காணொளிகளை பரிசீலிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள அதேவேளை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட 9 பேரும் நேற்று முன் தினம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.