துணிவு தியேட்டர் முதல் ஓடிடிவரை… வெளியானது அப்டேட்

வலிமை படத்துக்கு பிறகு மீண்டும் வினோத்துடன் இணைந்திருக்கிறார் அஜித். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்கள் மூலம் தன்னை வினோத் நிரூபித்தவர் என்பதால் வலிமை மீது ரசிகர்களுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் எதிர்பார்த்தபடி படம் ஒர்க் அவுட் ஆகவில்லை. வலிமை இப்படி வலுவற்று போனதற்கு பலரின் தலையீடுதான் காரணம் என தகவல் பரவியது. இந்தச் சூழலில் வினோத்துடன் மீண்டும் இணைந்திருக்கும் படம் க்ரைமை அடிப்படையாக வைத்து உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. க்ரைம் சப்ஜெக்ட்டிலும் அதற்கான டீட்டெயிலிங்கிலும் வினோத் அட்டகாசம் செய்பவர் என்பதால் இந்தப் படம் நிச்சய்ம் பந்தயம் அடிக்கும் என்கின்றனர் அஜித்தின் ரசிகர்கள். 

ஹைதராபாத், சென்னை, விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்தது. தொடர்ந்து கடந்த செப் 21ஆம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், பெயரும் வெளியிடப்பட்டது. அதன்படி படத்துக்கு ‘துணிவு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் அஜித் நெகட்டிவ் ரோலில் நடிக்கிறார்.

இதற்கிடையே படம் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 1987ஆம் ஆண்டு நடந்த வங்கிக்கொள்ளையை அடிப்படையாக வைத்துத்டான் துணிவு உருவாகியிருப்பதாக தெரிகிறது. தீரன் படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது. அதேபோல் தற்போது துணிவு எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுபோன்ற களத்தில் வினோத் கிங் என்பதால் துணிவு படம் மாபெரும் வெற்றியடையும் என ரசிகர்கள் கூறுகின்றனர்.

படம் பொங்கலுக்கு வெளியாகுமென்று அதிகம் கூறப்பட்டாலும் இதுவரை படக்குழுவிடமிருந்தோ, தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்தோ அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனாலும் பொங்கலுக்கு படம் வெளியாவதற்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாக கோடம்பாகத்தில் பேச்சு எழுந்திருக்கிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் துணிவு படத்தின் திரையரங்க உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதேபோல் துணிவு படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.