கமிலா மீண்டும் சார்லஸ் வசம் வர முக்கிய காரணமே அவரின் முதல் கணவர் தான்! உண்மை தகவல்


கமிலாவின் முதல் கணவர் ஆண்ட்ரூ பார்க்கர் குறித்த தெரியாத தகவல்களை வெளியிட்ட நிபுணர்.

கமிலா சார்லஸுடன் மீண்டும் இணைய அவரே முக்கிய காரணம் என்கிறார்.

முதல் கணவர் ஆண்ட்ரூ பார்க்கர் பவுல்ஸ் தான் கமிலா மீண்டும் சார்லஸ் உடன் இணைந்ததற்கு முக்கிய காரணம் என தெரிவித்துள்ளார் அரச நிபுணர் பெட்ரோனிலா வயட்.

இது தொடர்பாக டைய்லி மெய்ல் பத்திரிக்கையில் அவர் எழுதியுள்ளார்.
அதன்படி கமிலாவின் தற்போதைய ராணி என்ற நிலைக்கே ஆண்ட்ரூ ஒருவிதத்தில் காரணமாக இருந்திருக்கிறார் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆண்ட்ரூ தொடர்பில் வயட் தெரிவிக்கையில், அந்த சமயத்தில் பல பெண்களின் கண்கள் ஆண்ட்ரூ மீது பதிந்திருந்தன.
அவரது வசீகரம் எல்லாவற்றையும் கடந்து ஒரு கவர்ச்சியை கொடுத்தது.

கமிலா மீண்டும் சார்லஸ் வசம் வர முக்கிய காரணமே அவரின் முதல் கணவர் தான்! உண்மை தகவல் | Charles Andrew Parker Camilla Relationship

TIM GRAHAM//GETTY IMAGES

மறுபுறம், கமிலா மிகவும் அழகாக இல்லாவிட்டாலும் இனிமையானவராக காணப்பட்டார்.
ஆண்ட்ரூ ஏற்கனவே சார்லஸ் சகோதரி இளவரசி அன்னியுடன் டேட்டிங் சென்றவர்.

அதன்படி ஆண்ட்ரூ நம்பத்தகுந்த நபராக கமிலாவிடம் இல்லை. சார்லஸ், ஆண்ட்ரூ பார்க்கர் பவுல்ஸால் புறக்கணிக்கப்பட்ட கமிலா மீது ஆர்வம் காட்டினார்.

பின்னர் இறுதியாக திருமணத்தை முன்மொழிந்தார் என தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.