தொழிலதிபரை பெண்ணுடன் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய கும்பல்… சினிமாவை மிஞ்சும் சம்பவம்

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபரை கட்டாயப்படுத்தி, ஒரு பெண்ணுடன் அவரை நிர்வாணமாக இருக்கும் வகையில் சித்தரித்து வீடியோ எடுத்து பணம் பறிப்பில் ஈடுபட்டதாக மூன்று பேரை டெல்லி போலீசார் நேற்று (நவ. 5) கைது செய்தனர். கைதுசெய்யப்பட்டவர்கள் அமிர் இக்பால் (52),  முகமது அஸ்ரஃப் (50), ஃபிரோஜ் (30) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து டெல்லி மூத்த போலீஸ் அதிகாரி கூறுகையில்,”உத்தரப் பிரதேசத்தின் சஹாரன்பூர் பகுதியில் மர வியாபாரம் செய்துவரும் 45 வயதான சந்தீப் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), அடிக்கடி தொழில் காரணமாக டெல்லி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். 

அப்போது, கடந்த 3-4 மாதங்களாக சந்தீப்பிற்கு பெண் ஒருவர் தொடர்ந்து போன் செய்து வந்துள்ளார். அதில், அவரை தொழில் தொடர்பாக சந்திக்க வேண்டும் என தொடர்ந்து கேட்டு வந்துள்ளார். அவரின் கணவர் இறந்துவிட்டதாகவும், மூன்று குழந்தைகளுடன் வாழ்ந்துவருவதாகவும் அந்த பெண் கூறியுள்ளா். மேலும், தனக்கு வேலை வேண்டும் என்றும் பெண் கூறியதை அடுத்து, அந்த நபர் பெண்ணை ஒருமுறை சந்தித்துள்ளார். இன்னொரு முறை, அந்த பெண் ஒரு நபரை தனது உறவினர் என்று சந்தீப்பிடம் அறிமுகம் செய்துவைத்துள்ளார். 

இந்நிலையில், கடந்த அக். 28ஆம் தேதி அவரை சந்திக்க வேண்டும் என அந்த பெண் கூறியுள்ளார். சந்தீப் இருந்த கர்தம்புரி என்ற பகுதிக்கே அந்த பெண் வந்துள்ளார். அங்கிருந்து அந்த பெண்ணும், சந்தீப்பும் ஆட்டோவில் லஷ்மி நகரில் உள்ள அலுவலகம் ஒன்றுக்கு சென்றுள்ளனர். அப்போது, பெண்ணின் உறவினர் என கூறப்பட்டவரும் உடன் வந்துள்ளார். 
அந்த அலுவலகத்திற்குள் நுழைந்த உடனே, அந்த பெண், உறவினர் என கூறப்பட்ட நபரும், சந்தீப்பின் ஆடையை அகற்றத் தொடங்கியுள்ளனர். அதற்கு சந்தீப் மறுக்கவே, அவரை கொலை செய்துவிடவதாக மிரட்டியுள்ளனர். தொடர்ந்து, 6-7 பேர் அந்த இடத்திற்கு வந்துள்ளனர். மேலும், அவர்கள் தங்களை போலீஸ் என கூறியுள்ளனர். மேலும், அவர்கள் அங்கு நடப்பதை வீடியோ எடுக்க தொடங்கியுள்ளனர்.

சந்தீப்பை பலமாக தாக்கிய அவர்கள், அவரிடம் இருந்த பணத்தை திருடியுள்ளனர். அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர் தன்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் என கூறியுள்ளார். அவர் துப்பாக்கி முனையில் சந்தீப்பிடம் ரூ. 20 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளார். 

தொடர்ந்து, சந்தீப்பை நெருக்கடிக்கு உள்ளாக்கி, அந்த பெண்ணுடன் அவர் உல்லாசமாக இருப்பதுபோன்று அவர் வீடியோ எடுத்துள்ளனர். மேலும், தங்களிடம் இருந்து ரூ. 20 லட்சம் கடன் வாங்கியதாகவும், அந்த கடனை இரண்டு தவணையில் கொடுத்துவிடுவேன் என கேமரா முன் கூறும்படி சந்தீப்பை கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர். அவர்களுக்கு பணம் கொடுப்பதாக சந்தீப் ஒப்புக்கொண்ட பின்னரே, அவர்கள் சந்தீப்பை விடுவித்துள்ளனர்” என்றனர். இதையடுத்து, கடந்த நவ. 4ஆம் தேதி டெல்லி ஜோதி நகர் காவல் நிலையத்திற்கு வந்த சந்தீப் நடந்தவற்றை எடுத்துக்கூறி புகார் அளித்துள்ளார். 

புகாரை அடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றாவளிகளை தேட தனிப்படை ஒன்றை அமைத்தது. வெவ்வேறு இடங்களில் தொடர்ந்து சோதனை மேற்கொண்ட போலீசார் நேற்று மூன்று பேரை கைது செய்தனர். மேலும், குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட மஹேந்திரா பொலேரோ காரும் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.