மதம் வைத்து அரசியல் செய்பவரை, பதம் பார்க்க வந்தவரே! போஸ்டரால் பரபரப்பு!

கோவை மாநகர பகுதியில் சமீப காலமாக போஸ்டர் கலாச்சாரம் என்பது அதிகரித்து வருகிறது. குறிப்பாக பாஜக மற்றும் திமுகவினர் மாறி மாறி போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். இதே போல கோவை ரயில் நிலையம் பகுதியில் மத்திய மாவட்டம் மக்கள் நீதி மையத்தினர் நவம்பர் 7ல் பிறந்தநாள் காணும் கமலஹாசனுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.  அந்த போஸ்டரில் மனிதனை மனிதனா பாரு, மதங்களும் தன்னால ஓடும் எனவும், மதம் வைத்து அரசியல் செய்பவரை, பதம் பார்க்க வந்தவரே நம்மவரே! நீ வாழ்க பல்லாண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது இணையத்தில் மற்றும் கோவை பகுதிகளில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  பொதுவாக அஜித், விஜய் ரசிகர்கள் தான் இவ்வாறு போஸ்டர்கள் ஓட்டுவார்கள்.  வருங்கால முதல்வரே, மக்களை காக்க வந்த வள்ளலே போன்ற வசங்களுடன் இவர்கள் ஓட்டும் போஸ்டர்கள் சர்ச்சையை கிளப்பும்.  அந்த வரிசையில் தற்போது கமலின் ரசிகர்களும் இணைந்துள்ளனர்.  

கமல் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.  மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.  நாளை அவரது பிறந்தநாளை ஒட்டி விக்ரம் படத்தின் வெற்றி விழாவும் சென்னையில் நடைபெற உள்ளது.  கமல்ஹாசன் அடுத்ததாக வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும், அதற்கான அறிவிப்பும் விரைவில் வெளிவர உள்ளதாகவும் கூறப்படுகிறது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.