தேர்தல் பிரசாரம்… இந்தியாவை வம்புக்கு இழுத்த முன்னாள் பிரதமர்!

நேபாளத்தில் இம்மாத இறுதியில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் பிரதமரான கே.பி.சர்மா ஒலி, தார்ச்சுலா மாவட்டத்தில் தனது கட்சியின் (நேபாள கம்யூனிஸ்ட் கட்சி) தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியபோது, ‘ நாட்டின் ஒரு அங்குல நிலத்தை கூட அண்டை நாடுகளுக்கு விட்டு தரமாட்டோம். எங்கள் கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், இந்திய ஆக்கிரமிப்பு பகுதிகளான காலாபானி, லிபுலெக், லிம்புயதுரா உள்ளிட்டவற்றை மீட்டெடுத்து தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்வோம்’ என்று சூளுரைத்தார்.

கே.பி.சர்மா ஒலி பிரதமராக இருந்தபோது அவரது தலைமையிலான அரசு, இந்தியாவின் மேல்குறிப்பிட்ட 3 பகுதிகளை நேபாளத்துடன் இணைத்த தேசத்தின் புதிய வரைபடத்தை வெளியிட்டது. அப்பகுதிகளை இந்தியா ஆக்கிரமித்துள்ளதாக பகிரஙகமாக குற்றம்சாட்டி இருந்தது. இந்த குற்றச்சாட்டுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு… பிரதமரை கைக்காட்டும் தெஹ்ரீக்- இன்சாப் கட்சி!

இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தின்போது மீண்டும் இந்த விஷயத்தை அவர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.சர்மா ஒலி. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில் கே.பி.சர்மா ஒலி இவ்விவகாரத்தை மீண்டும் பேசி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது

நேபாளத்தில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை கருத்தில் கொண்டு, பொது போக்குவரத்து வசதி உள்ளிட்டவற்றுக்காக அந்நாட்டுக்கு இந்தியா 200 வாகனங்களை இந்தியா அளித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.