சென்னையில் மழைநீர் உடனுக்குடன் அகற்றப்படுவதாக அமைச்சர் நேரு தகவல் – புகார் எண்கள் அறிவிப்பு…

சென்னை: சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் பொதுமக்கள் புகார் தெரிவிக்க உதவி எண்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. அதே வேளையில், மழைநீரை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் நேரு தெரிவித்து உள்ளார்.

சென்னையில் நேற்று இரவுமுதல் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை முழுவதும் ஆங்காங்கே மழைநீர் தேங்கி வருகிறது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில், இன்று காலை பேரிடர் கால அவசர கட்டுப்பாடு மையத்தில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் நேரு, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது,  சென்னையில்,  மழைநீர் தேங்கும் இடங்களில் உடனுக்குடன் மோட்டார்கள் மூலம் நீர் அகற்றப்படுவதாக  கூறியவர்,, சென்னையில் எங்கும் மழைநீர் தேங்கவில்லை, தேங்கிய சில இடங்களிலும் மழை நீர் உடனடியாக அகற்றப்பட்டது. எங்கேயாவது தவறு நடந்தால் அனைத்தையும் குறைசொல்வது சரியல்ல. தகுந்த முன்னெச்சரிக்கையுடன் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன என கூறினார்.

இதற்கிடையில்,   சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் பொதுமக்கள் புகார் தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 044-25619206, 07, 08 என்ற எண்கள், 9445477205 என்ற வாட்ஸ்அப் எண்ணில் அழைக்கலாம். சென்னை மாநகராட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் புகார் அளிக்கலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை மக்கள் கவனத்திற்கு! மழை பாதிப்பு குறித்து புகார் அளிக்க பிரத்யேக தொலைபேசி எண்கள் அறிவிப்பு…

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.