Viral News: இலக்கை எட்டாத பணியாளரின் மண்டையை உடைத்த மேலதிகாரி!

மகாராஷ்டிராவின் தலைநகர் மும்பையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அமபலமாகியுள்ளது. உண்மையில், நகரின் போரிவலி பகுதியில், ஒரு நிறுவனத்தின் முதலாளி தனது ஊழியரை கடுமையாக தாக்கியுள்ளார். நிறுவனம் நிர்ணயித்த இலக்கை அவரால் பூர்த்தி செய்ய முடியாத நிலையில், அவர் ராஜினாமா செய்ய முன் வந்தார், ஆனால் அவரது பாஸ் ராஜினாமாவை ஏற்கவில்லை. நிறுவனத்தில் ஒரு கூட்டத்தில், முதலாளி மிகவும் கோபமடைந்து, பணியாளரின் தலையில் மேஜை கடிகாரத்தை தூக்கி அடித்தார். ஊழியரின் புகாரின் பேரில் முதலாளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

30 வயதான ஆனந்த் சிங் போரிவலியில் உள்ள ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிகிறார். கடந்த ஆண்டு தான் அந்த நிறுவனத்தில் உதவி கிளஸ்டர் மேலாளராக பணியில் சேர்ந்ததாக ஆனந்த் போலீசாரிடம் தெரிவித்தார். ஒரு வங்கியின் உடல்நலக் காப்பீட்டுத் திட்டங்களை விற்க அவருக்கு இலக்கு வழங்கப்பட்டது. செப்டம்பரில் அவர் ரூ.5 லட்சம் ரூபாய்க்கான காப்பீட்டை விற்று இலக்கை அடைய வேண்டும், ஆனால் அவரால் அதைச் செய்ய முடியவில்லை, அக்டோபர் 9 அன்று அவர் தனது ராஜினாமா கடிதத்தை மேலாளர் அமித் சிங்கிடம் அளித்தார். ஆனால் அவர் அதை ஏற்கவில்லை.

காலை 9:30 மணிக்கு அமித் சிங் தன்னை அலுவலகத்திற்கு அழைத்ததாக ஆனந்த் கூறினார். அப்போது பணி விவரங்களை கேட்டறிந்தார். தனது இலக்கை நிறைவேற்ற முடியவில்லை என்று ஆனந்த் கூறினார். மாலைக்குள் அனைத்து விவரங்களையும் தருகிறேன் என்றார். இதைத் தொடர்ந்து அமித் மீண்டும் அவரை அழைத்தார். அமித் தொலைபேசியில் மிகவும் கடுமையாக பேசிய நிலையில், மாலை அவரை அலுவலகத்தில் வந்து சந்திக்குமாறு அழைத்தார்.

மேலும் மாலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் தொடங்கியது. அப்போது, ​​அமித் அமைதி இழந்து, திடீரென டேபிள் கடிகாரத்தை எடுத்து, ஆனந்தின் தலையில் அடித்தார். கடிகாரத்தின் பிளாஸ்டிக் உடைந்து தலையில் குத்தி ரத்தம் வர ஆரம்பித்ததாக ஆனந்த் கூறுகிறார். சக ஊழியர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். டாக்டர்கள் அவரது தலையில் இருந்து பிளாஸ்டிக் துண்டுகளை அகற்றி காயத்திற்கு தையல் போட்டனர்.

ஐந்து லட்ச ரூபாய் டார்கெட் நிர்ணயித்த நிலையில், ஒன்றரை லட்ச ரூபாயை மட்டுமே எட்ட முடிந்தது என்றும் ஆனந்த் கூறினார். எனவே அவர் விலகத் தயாராக இருந்தார். அவரும் தனது ராஜினாமா கடிதத்தை அளித்திருந்தார். ஆனால் அதை ஏற்க அமித் தயாராக இல்லை. அவர் ஆனந்தை . குற்றம் சாட்டப்பட்டவர் மீது தாக்குதல் தொடர்பான ஐபிசி பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போரிவலி காவல் நிலைய அதிகாரி நினாத் சாவந்த் தெரிவித்தார். எனினும் அவரை நாங்கள் கைது செய்யவில்லை என்றும் அவர் கூறினார். பிரிவு-41ன் நோட்டீஸை அவர்களுக்கு வழங்குவோம். அதன் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை அதிகாரி மேலும் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.