பிரித்தானியா மீதான வெறுப்பு… ரஷ்யாவுக்காக உளவு பார்த்த பிரித்தானியரின் பரபரப்பு வாக்குமூலம்


ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரித்தானியர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

பிரித்தானிய தூதரகத்தில் பணியாற்றிய பிரித்தானியர்

ஜேர்மனியிலுள்ள Potsdam என்ற இடத்தில் வாழ்ந்துவந்த ஸ்மித் (David Ballantyne Smith,58) என்பவர், பெர்லினில் அமைந்துள்ள பிரித்தானிய தூதரகத்தில் பாதுகாவலராக பணியாற்றிவந்துள்ளார்.

2021ஆம் ஆண்டு, ஆகத்து மாதம் அவர் கைது செய்யப்பட்டு, ஜேர்மனியிலிருந்து பிரித்தானியாவுக்குக் கொண்டுவரப்பட்டார். கடந்த வாரம் லண்டனிலுள்ள Old Bailey நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அவர், தன் மீதான எட்டுக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார்.

பிரித்தானிய அரசு அதிகாரிகள் குறித்து Major General Sergey Chukhurov என்னும் ரஷ்ய அதிகாரிக்கு தகவல்களைக் கொடுத்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

அதுபோக, பெர்லினிலுள்ள பிரித்தானிய தூதரகத்தின் வரைபடம் முதலான ரஷ்ய அரசுக்கு பயனுள்ள பல தகவல்களை அவர் கொடுத்ததையும் ஒப்புக்கொண்டுள்ளார்.
 

பிரித்தானியா மீதான வெறுப்பு... ரஷ்யாவுக்காக உளவு பார்த்த பிரித்தானியரின் பரபரப்பு வாக்குமூலம் | Hatred Of Britain And Britain Bitter

File: Euroluftbild.de/Robert Grahn/Reuters

பிரித்தானியா மீது வெறுப்பு

இந்நிலையில், பிரித்தானியா மற்றும் பிரித்தானிய தூதரகம் மீதான வெறுப்பின் காரணமாகவும், ரஷ்ய அதிகாரிகள் மீதான இரக்கத்தின் காரணமாகவும் Smith ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உளவு பார்த்ததற்காக, Smithக்கு அதிகபட்சம் 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.