இமாச்சல் பிரதேசத்தில் 75.06% வாக்குப் பதிவு

புதுடெல்லி: இமாச்சல் பிரதேச சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 75.06 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். மலை பிரதேசமான இமாச்சல் சட்டமன்ற தேர்தலில், நேற்று முன்தினம் வாக்குபதிவு நடந்தது. காலை 8 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கிய போது முதலில் மந்தமாக இருந்தது. பின்னர், குளிர்ந்த சீதோஷ்ணநிலை மாறி வெயில் அடிக்க தொடங்கியதும் விறுவிறுப்படைந்தது. வாக்காளர்கள்  ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து வாக்களிக்க தொடங்கினர்.  

வாக்குபதிவு ஆரம்பித்த ஒரு மணி நேரத்தில் 5 சதவீதம் இருந்தது. மதியம் 1 மணிக்கு இது 37.19 சதவீதமாக அதிகரித்தது. மாலை 5 மணி வரையில் 66.58 சதவீதம் பேர் வாக்களித்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், மாநில தேர்தல் அதிகாரிகள் நேற்று  கூறுகையில், ‘‘ சட்டமன்ற தேர்தலில் இறுதி நிலவரப்படி  75.06 % வாக்குகள் பதிவானது,’’ என்றனர். கடந்த 2017ம் ஆண்டு தேர்தலில் இங்கு 75.57 சதவீத வாக்கு பதிவானது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.