நாங்கள் உங்கள் பின்னால் இருக்கிறோம்..உலகக்கோப்பையை வெல்லுங்கள்..பிரித்தானிய பிரதமர் ரிஷிசுனக்


உலகக்கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு பிரதமர் ரிஷி சுனக் வாழ்த்து தெரிவித்துள்ளார்


இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்களுடன் சேர்ந்து உங்களை (இங்கிலாந்து அணி) உற்சாகப்படுத்துவேன் – ரிஷி சுனக்

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ரசிகர்களுடன் சேர்ந்து உங்களை உற்சாகப்படுத்துவேன் என இங்கிலாந்து அணிக்கு ரிஷி சுனக் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இன்று மெல்போர்னில் நடக்கும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

நாங்கள் உங்கள் பின்னால் இருக்கிறோம்..உலகக்கோப்பையை வெல்லுங்கள்..பிரித்தானிய பிரதமர் ரிஷிசுனக் | Rishi Sunak Wishes To Eng Team For Wc T20

Twitter

சம பலம் கொண்ட இரு அணிகள் மோதுவதால் இந்தப் போட்டிக்கு உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இடையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த நிலையில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் இங்கிலாந்து அணிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Rishi Sunak

அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘நாளை(இன்று) நடக்க உள்ள பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள்.

இங்கிலாந்து முழுவதும் உள்ள மற்ற கிரிக்கெட் ரசிகர்களுடன் சேர்ந்து உங்களை உற்சாகப்படுத்துவேன்.

நாங்கள் எல்லா வழிகளிலும் உங்கள் பின்னால் இருக்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.   


 




Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.