திடீரென துப்பாக்கியுடன் நுழைந்த நபர்.. உயிருக்கு பயப்படாமல் செயல்பட்ட காவலாளி.. பரபரப்பு வீடியோ


அமெரிக்காவில் சிறிய மருத்துவமனையில் திடீரென துப்பாக்கியுடன் நுழைந்த நபரை, காவலாளி ஒருவர் துணிச்சலுடன் பிடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

துப்பாக்கியுடன் நுழைந்த நபர் 

நியூயார்க்கில் உள்ள சிறிய மருத்துவமனை ஒன்றில் நபர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் திடீரென நுழைந்தார்.

அப்போது அங்கிருந்த காவலாளி பதறிப்போனார்.

எனினும் அவர் துணிச்சலுடன் செயல்பட்டு சுவற்றில் துப்பாக்கியால் சுட்ட தாக்குதல்தாரியை பாய்ந்து வந்து, அவரது கழுத்து பின்னிருந்து பிடித்து அசம்பவாவிதம் நிகழாமல் தடுத்தார்.

அதனைத் தொடர்ந்து மேலும் இரண்டு காவலாளிகள் அங்கு வந்தனர். மேலும் இரு வழிப்போக்கர்களின் உதவியுடன் குறித்த தாக்குதல்தாரி மடக்கி பிடிக்கப்பட்டார்.

அவரிடம் இருந்து AR-15 ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்டது.

அதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், துப்பாக்கியுடன் நுழைந்த நபர் Williamsville-வை சேர்ந்த ஜெர்மி கிரிஃபின்(48), அவர் கொலை முயற்சி உட்பட பல குற்றச்செயல்களில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

திடீரென துப்பாக்கியுடன் நுழைந்த நபர்.. உயிருக்கு பயப்படாமல் செயல்பட்ட காவலாளி.. பரபரப்பு வீடியோ | Gunman Stopped By Guard New York Clinic Video

முன்னதாக, பென்சில்வேனியா வீதியில் பெண்ணொருவரை கிரிஃபின் காலில் சுட்டுள்ளார். அப்பெண் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

திடீரென துப்பாக்கியுடன் நுழைந்த நபர்.. உயிருக்கு பயப்படாமல் செயல்பட்ட காவலாளி.. பரபரப்பு வீடியோ | Gunman Stopped By Guard New York Clinic Video

மடக்கிப்பிடித்த காவலாளி 

இந்த இரண்டு சம்பவங்களும் போதை மருந்துக்கான கொள்ளை முயற்சியாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதாக கூறினர்.

இதற்கிடையில், கிரிஃபினை முதலில் மடக்கிப் பிடித்த காவலாளி ரெய்னல்டோ கூறுகையில்,

‘என் உயிருக்கு நான் பயப்படவில்லை என்று கூறினால், நான் உங்களிடம் பொய் சொல்கிறேன் என்று அர்த்தம்.

அந்த சமயம் என் மூளையில் பளிச்சிட்டது எனது மூன்று வயது ஆண் குழந்தை. ஆனால், பாதுகாப்பது தான் என் தொழில். சேவை செய்வதற்கும், பாதுகாப்பதற்கும் நான் அதைத் தான் செய்தேன்’ என தெரிவித்துள்ளார்.    



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.